Latest Updates
-
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க..
2025-ல் நிகழும் சனி-சூரிய சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகுது...
Saturn Sun Conjunction In Aquarius 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அவ்வாறு ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டில் நுழையும் போதே நீதிமான் சனி பகவான், தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவார். அதே சமயம் கிரகங்களின் தலைவனாக கருதப்படும். சூரியன் பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி கும்ப ராசிக்கு நுழையவுள்ளார். இதனால் கும்பத்தில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது.

சூரியனும், சனியும் தந்தை மகனாக இருந்தாலும், எதிரிகளாக கருதப்படுகின்றனர். என்ன தான் எதிரியாக இருந்தாலும், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களின் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கப் போகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை மார்ச் 14 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது கும்ப ராசியில் நிகழும் சனி சூரிய சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். சூரியனின் ஆசியால் மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதோடு, தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பயணங்களால் நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். புதிய சொத்து, வாகனம், வீடு வாங்கும் கனவு நனவாகும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். சமூகத்தில் நிலை உயரும். பெற்றோருடனான உறவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும். எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறவும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்கள் ஏராளமான ஆர்டர்களைப் பெற வாய்ப்புள்ளது. இதன் விளைவாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications