Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
2025 தொடக்கத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கையால் இந்த 5 ராசிக்கு பெரிய நஷ்டம் ஏற்படப்போகுது.. உஷார்..
Saturn Sun Conjunction In Aquarius 2025: இன்னும் சில நாட்களில் 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி 2025 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுவதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் காணக்கூடும்.
முக்கியமாக 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு முக்கிய கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. அதுவும் இரண்டு பகை கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதாவது கிரகங்களின் தலைவனான சூரியனும், நீதிமான் சனி பகவானும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒன்றிணைந்து கும்ப ராசியில் பயணிக்கவுள்ளனர்.

இவ்விரு கிரகங்களும் என்ன தான் தந்தை-மகன் உறவைக் கொண்டிருந்தாலும், பகை கிரகங்களாகும். எனவே இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு பெரிய இழப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம்.
இப்போது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழும் சனி சூரிய சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் உடன் வேலை செய்வோரிடம் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்களை யாரேனும் பயன்படுத்திக் கொண்டு, உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். வீட்டிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். எவ்வித வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். காதலித்து வந்தால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய பண இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். தேவையற்ற கோபம் மற்றும் மன அழுத்தம் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். பிரச்சனைகளில் இருந்து விலகி இருங்கள். இல்லாவிட்டால் அவதிப்பட நேரிடும். வியாபாரிகள் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களில் அதிகம் ஈடுபட நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மாற்றங்களை சந்தித்து, சிரமங்களுக்கு உள்ளாகலாம்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனையை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் உறவில் விரிசல் ஏற்படும். வியாபாரிகளுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிட மாற்றங்கள் உங்களுக்கு பெரிய தொந்தரவை ஏற்படுத்தும். பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தந்தை மற்றும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திற்கு நிறைய மருத்துவ செலவுகளை செய்ய வேண்டியிருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமாகலாம் மற்றும் இருவரிடையே கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கலாம். வியாபாரிகள் இக்காலத்தில் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சூரிய சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப பிரச்சனைகள் தலைத்தூக்கும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். எந்த முடிவை எடுக்கும் முன்பும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எடுக்க வேண்டும். பணியிடத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் யாரையும் நம்பாதீர்கள். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
