Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கப்போகுது...
Saturn Rise In Pisces On April 2025: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் பயணிப்பார். இதனால் ஒருவரது வாழ்க்கையில் சனியின் தாக்கம் நீண்ட காலம் இருக்கும்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் 2025 மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். அஸ்தமன நிலையில் சனி பகவான் மீன ராசிக்கு செல்வதால், சனியின் தாக்கம் அதிகமாக இருக்காது.

ஏனெனில் அஸ்தமன நிலையில் சனி பகவான் பலவீனமாக இருப்பார். ஆனால் ஏப்ரல் 06 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார். மீன ராசியில் சனி உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படுவதோடு, சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது மீன ராசியில் உதயமாகும் சனியால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும்.
பணியிடத்தில் கொடுக்கப்படும் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் நிதி நிலையில் உயர்வு ஏற்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, அதைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள்.
புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். குடும்பத்தினருடனான உறவு மேம்படும். முக்கியமாக நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இதன் மூலம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எல்லா வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றகிரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். தொழில் ரீதியாக பல சிறப்பான பலன்களைப் பெறக்கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் போட்டியாளர்களுடனான கருத்து வேறுபாடுகள் தீரும். தொழில் வாழ்க்கையில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். முக்கியமாக சனி பகவானின் ஆசியால் புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
