Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: ஏப்ரல் முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
Saturn Rise In Pisces 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். சனி பகவான் ஒரு ராசியில் பயணிக்கும் போது, அஸ்தமனமாவது, உதயமாவது, வக்ரமாவது, வக்ர நிவர்த்தி அடைவது என்று அவரது நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இந்த ராசியில் பிப்ரவரி 22 ஆம் தேதி அஸ்தமனமானார். அதன் பின் இந்த அஸ்தமன நிலையிலேயே சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி குரு பகவானின் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். பின்னர் ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் உதயமாகவுள்ளார்.

சனி உதயமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இதன் விளைவாக நல்ல நிதி ஆதாயத்துடன், முன்னேற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது சனி உதயமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தால் நல்ல வேலையைப் பெறலாம். தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகரிக்கும். வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் காணக்கூடும். முயற்சிகளுக்கான பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதனால் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றகரமாக முடிவடையும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்காலத்தில் பெரிய அளவில் நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலை வலுவடையும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடு செய்திருந்தால், எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனம், வீடு, சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
