Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
30 ஆண்டுகள் கழித்து வக்ரமாகும் சனி பகவான்: ஜூலை முதல் அடுத்த 138 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
Saturn Retrograde In Pisces On 27 July 2026: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்பட பலன்களைத் தரக்கூடியவர். இதனால் தான் இவர் நீதிமான் என்று அழைக்கப்படுகிறார். இப்படிப்பட்ட சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்கள். இதற்கிடையில் சனி பகவான் வக்ரமாவதோடு, வக்ர நிவர்த்தி அடைந்தும் பயணிப்பார்.
அந்த வகையில் சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த மீன ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். மேலும் இக்காலகட்டத்திற்குள் சனி பகவான் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். அப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும், அதன் விளைவாக யோகங்கள் உருவானாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் சனி பகவான் 2026 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். சனி வக்ரமாவதால் 12 ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தேவையற்ற செலவுகள் குறையும். பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உயர் அதிகாரிகள் உங்கள் செயல்திறனை பாராட்டுவார்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக கடந்த கால செயல்களின் அடிப்படையில் சனி பகவான் உங்களுக்கு பலன்களைத் தருவார்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகும். உங்களின் வேலையை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் மிகச்சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடனான உறவு சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications