Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: இந்த 3 ராசிக்காரங்களோட செல்வமும், சொத்தும் அதிகரிக்கப்போகுது...
Saturn Retrograde In Pisces 2025: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருந்தாலும், அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிப்பார். அந்த வகையில் சனி பகவான் சமீபத்தில் தான் குரு பகவானின் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் சனி பகவான் அடுத்த 2 1/2 ஆண்டுகள் இருப்பார்.
இந்நிலையில் சனி பகவான் வருகிற ஜூலை 13 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில், அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் சுமார் 138 நாட்கள் இருப்பார். பொதுவாக சனி வக்ரம் பெற்றால் நன்மை உண்டு. அது ஒருவரது ஜாதகத்தைப் பொறுத்து மாறுபடும். திருமணம் நடக்கும், தொழில் கைகூடும், ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும், வீட்டில் இருக்கும் கசப்புணர்வுகள் மாறும். ஒற்றுமை நிலவும்.

ஆனால் இந்தப் பலன்கள் மற்ற கிரகங்களின் அமைவைப் பொறுத்து மாறுபடலாம். இந்த சனி பகவான் வக்ர நிலையில் நவம்பர் 28 ஆம் தேதி வரை இருப்பார். இப்படி சனி வக்ரமாவதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு அருமையாக இருக்கும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படலாம். சனி பகவானின் ஆசியால் செல்வம் பெருகும். பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலையை மாற்றம் எண்ணம் இருந்து, அதற்கு முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, பரம்பரை சொத்து கைக்கு வரும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் தந்தையுடன் இந்த பிரச்சனைகள் நீங்கி, அவருடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications