Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
138 நாட்கள் வக்ரமாக இருக்கும் சனி பகவான்: எந்த ராசிக்கு சிறப்பாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா?
Saturn Retrograde In Pisces 2025: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இந்த சனி பகவான் தற்போது குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசியில் நுழைந்துள்ள சனி பகவான், ஜூலை 13 ஆம் தேதி வக்ர நிலையில் அதாவது பின்னோக்கி நகரத் தொடங்கியுள்ளார்.
இந்த வக்ர நிலையில் சனி பகவான் சுமார் 138 நாட்கள் இருக்கவுள்ளார். சனி பகவான் வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். நவகிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர்.

சனியின் நிலைகள், அசுப பார்வை, ஏழரை சனி மற்றும் அஷ்டம, அர்த்தாஷ்டம சனி ஆகியவை ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. அதுவும் ஜூலை 13 ஆம் தேதி வக்ரமாகியுள்ள சனி பகவானால் அடுத்த 138 நாட்கள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 12 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மீது சனியின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். சொல்லப்போனால் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக தேவையில்லாத செலவுகள் குறைவதைக் காணக்கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 11 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த சனியின் வக்ர நிலையால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். ஆனால் ஆரோக்கிய பிரச்சனைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியின் 8 மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 10 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. மிகப்பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக வேலை மற்றும் தொழிலில் பல தடைகளை சந்திக்க நேரிடும் மற்றும் வியாபாரத்தை மெதுவாக்கும்.
கடகம்
கடக ராசியின் 7 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 9 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சுமாராக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி எதையும் செய்யாதீர்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 6 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 8 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. சொல்லப்போனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனைகளை அதிகரிக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டாமல், பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 5 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 7 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. பணப்பிரச்சனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனா உறவு மோசமாக இருக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 4 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான் 6 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்கள் எதிரிகள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 3 மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 5 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 2 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 4 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மொத்தத்தில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 1 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 3 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சனி வக்ரமாக இருந்தாலும், வெற்றிகள் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியின் 12 மற்றும் 1 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 2 ஆவது வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சனி பகவானின் ஆசியால் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 11 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், முதல் வீட்டில் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் நிதி மற்றும் குடும்ப விஷயங்களில் எந்த ஒரு ரிஸ்க்கையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications