Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை வெச்சு செய்யப்போகுது... உஷார்..
Saturn Moon Conjunction Make Vish Yog On 18 July 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்ற கிரகங்களுடன் சேர்த்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது நீதிமான் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் ஜூலை 18 ஆம் தேதி மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியின் சனி மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையினால் மிகவும் மோசமான விஷ யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் பிரச்சனைகள் வாழ்க்கையில் அதிகரிக்கும். அதோடு பண இழப்பு, ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவற்றை அதிகம் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது சனி சந்திர சேர்க்கையால் உருவாகும் விஷ யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். மேலும் யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு திரும்ப வராது. அதோடு தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியமும் மோசமடையக்கூடும்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணாக செலவழிக்க நேரிடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு எதுவும் கிடைக்காது. கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். மேலும் வேலைப்பளு அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் மீது தவறாக சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே யாருடனும் அதிகம் பேச்சை வைத்துக் கொள்ளாதீர்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி சந்திர சேர்க்கையால் விஷ யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் தேவையில்லாத பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஏதாவது உடல் உபாதைகளால் அவதிப்பட நேரிடும். முக்கியமாக பழைய நோய் மீண்டும் தலைத் தூக்கி மருத்துவ செலவை அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications