Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Saturn Mercury Conjunction In Poorattathi Nakshatra: வேத ஜோதிடத்தில் கர்மத்தை அளிப்பவரான சனி பகவான் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் பூரட்டாதி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். சனி பகவான் குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரல் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதே வேளையில் சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கும்.

இந்நிலையில் ஏப்ரல் 03 ஆம் தேதி புத்திகாரகனான புதனும் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். இதனால் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி மற்றும் புதனின் சேர்க்கை நிகழவுள்ளது. இப்படி புதன் மற்றும் சனியின் சேர்க்கை நிகழ்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். பணியிடத்தில் உயர்அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். இதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இதுவரை வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் இடையூறுகளை சந்தித்து வந்தால், இப்போது அது முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். சனி பகவானின் ஆசியால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவுகள் குறைந்து, நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சனி புதன் சேர்க்கையால் துலாம் ராசிக்காரர்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் எதிரிகளை திறம்பட வீழ்த்துவீர்கள். இக்காலத்தில் உங்களின் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இந்நிலையில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
