Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
சனி செவ்வாய் உருவாக்கும் நவபஞ்ச ராஜயோகம்: ஆகஸ்ட் 09-ல் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Saturn Mars Make Navpancham Rajyog 09 August 2025: ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல சுப மற்றும் ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. இந்த ராஜயோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஆகஸ்ட் 09 ஆம் தேதி மங்களகரமான யோகங்களுள் ஒன்றான நவபஞ்ச ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது சனி மற்றும் செவ்வாயால் உருவாகவுள்ளது.
ஜோதிடத்தில் சனி பகவானின் நிலையும், அம்சமும் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் கிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். அதுவே சனி மோசமான நிலையில் இருந்தால், பல வகையான துன்பங்களை சந்திக்க நேரிடும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும், சனியும் ஆகஸ்ட் 09 ஆம் தேதி நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது சனி செவ்வாயால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோக காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தலைமைத்துவ திறன்களும் அதிகரிக்கும். இதனால் எப்பேற்பட்ட சிரமங்களையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். இந்த நண்பர்களால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். மன அமைதி அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது நிதி ரீதியாக நல்ல பலன்களைத் தரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இலக்குகளை அடைந்து நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். நீண்ட கால ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். அதோடு இலக்குகளை அடைந்து நல்ல வெற்றியும் பெறுவீர்கள். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
