Latest Updates
-
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க..
2026-ல் சனி-குரு சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிகளின் கையில் பணம் குவியும்...
Saturn Jupiter Make Maha Sanyog 2026: ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதோடு மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களையும் உருவாக்கவுள்ளன. முக்கியமாக 2026 ஆம் ஆண்டில் நீதிமான் சனி பகவானும், தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும் ஒன்றிணையவுள்ளனர். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் ஒரு அரிய யோகமான மகா சம்யோகம் உருவாகவுள்ளது.
2026 ஆம் ஆண்டில் குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசிக்குள் குரு பகவான் நுழைந்ததும், அது சனி பகவானுடன் சேர்ந்து சிறப்பான யோகத்தை உருவாக்கவுள்ளார். ஏற்கனவே சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. இக்காலத்தில் சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் இருப்பார். இப்படி குரு மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகும் யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதுவும் வருமானத்தில் உயர்வு, தொழிலில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள் போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது 2026-ல் குரு சனியால் உருவாகும் அரிய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சனி குருவின் சேர்க்கையால் உருவாகும் யோகத்தால் கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இதனால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைப்பதால், இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் நிகழும் சனி குருவின் சேர்க்கையால் வாழ்வில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆளுமை மேம்படும். வாழ்வின் முக்கியமான பகுதிகளில் அடையாளத்தை நிலைநாட்டுவீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
கும்பம்
2026 ஆம் ஆண்டில் சனி குருவின் சேர்க்கையால் உருவாகும் யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். மேலும் இந்த சேர்க்கையால் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications