Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
சனி-குரு உருவாக்கும் கேந்திர யோகம்: ஜூன் 15 முதல் இந்த 3 ராசிக்கு ராஜயோக காலமா இருக்கப்போகுது...
Saturn Jupiter Make Kendra Yog On 15 June 2025: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. மேலும் கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இந்த சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
இதனால் சனி பகவான் அவ்வப்போது ஏதாவது ஒரு கிரகத்துடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சத்தாலோ, ராஜயோகங்கள் உருவாகும். அந்த வகையில் சனி பகவான், குரு பகவானுடன் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளார். அதுவும் இந்த கேந்திர யோகமானது சனியும், குருவும் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருக்கும் போது உருவாகிறது.

இந்த கேந்திர யோகமானது ஜூன் 15 ஆம் தேதி உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சனி மற்றும் குருவினால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது மகத்தான வெற்றியைத் தரப் போகிறது. இக்காலத்தில் சற்று சோம்பலை சந்தித்தாலும், அதை எதிர்த்து போராடி வெற்றி பெறுவீர்கள். உங்களின் ஒவ்வொரு வேலையிலும் உள்ள தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற கனவு இருந்தால், அது நனவாகும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது வேலையில் இருந்த தடைகளை நீக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நன்மைகளைத் தரும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டி பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகம் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications