Latest Updates
-
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது..
நவம்பரில் நடக்கும் சனி வக்ர நிவர்த்தியால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பெரிய துன்பங்கள் வரப்போகுதாம்...!
சனிபகவானின் பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் சனிப்பெயர்ச்சியின் போது பெரும்பாலான ராசிக்காரர்கள் தண்டனைகளை அனுபவிப்பார்கள். ஜோதிடத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல மற்ற அனைத்து கிரகங்களையும் விட சனி அதிக காலம் எடுத்துக் கொள்கிறது. சனிபகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். நவம்பர் மாதம், சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். சனியின் இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும்.
சனியின் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கும். இது சிலருக்கு ஆதாயங்களை அளித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு துன்பத்தையும் தருகிறது. இந்த வகையில் நவம்பர் முதல் வாரத்தில் சனியின் நிலை மாற்றத்தால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கன்னி
சனியின் வக்ர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. கடன் வாங்கி முதலீடு செய்பவர்களுக்கு பெரிய நஷ்டம் காத்திருக்கிறது. அதனால், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாது.
வங்கிகள் மூலமாகவும் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகள் உங்களுக்கு தோல்விகளை பரிசளிக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் பல பிரச்சினைகளை சந்திப்பார்கள். நிதிரீதியான சிக்கல்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம், மேலும் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. மேலும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்காமல் கவனமாக இருங்கள், இல்லையெனில் உங்கள் உறவுக்குள் விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. சின்ன சின்ன விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சக ஊழியர்களால் மோசமான அனுபவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் கலவையான அனுபவங்கள் கிடைக்கும். சில விஷயங்களால் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குழந்தைகள் மூலம் கவலைகளை அதிகரிக்கும் செய்திகளை கேட்க அதிக வாய்ப்புள்ளது. திருமண விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வேலை தேடுபவர்கள் பல்வேறு சிரமங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். தம்பதியரிடையே சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் வேலை தேடுபவர்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும். அதேபோல் மாணவர்களும் படிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

