Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
சனி மற்றும் ராகு உருவாக்கும் பரிவர்த்தன யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து அடிக்கப்போகுதாம்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் நடக்கும் போது அதன் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். இந்த கிரக பெயர்ச்சிகள் பெரும்பாலும் நல்ல பலன்களையும், சில சமயங்களில் மோசமான விளைவுகளையும் தரும். சனி மற்றும் ராகு இரண்டும் பெரும்பாலும் மோசமான பலன்களைக் கொடுக்கும் கொடுக்கும் கிரகங்கள் என்று கருதப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்த கிரகங்களின் நிலை வலுவாக இருந்தால் அவற்றால் கிடைக்கும் நற்பலன் இரட்டிப்பாகும் என்பது பலருக்கு தெரியாது.
பெரும்பாலும் சனி ஒரு ராசியில் சுமார் ஆறு ஆண்டுகள் இருக்கிறார். அதேபோல ராகு பதினெட்டு மாதங்கள் ஒரு ராசியில் இருக்கிறார். சனியும் ராகுவும் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து வித நன்மைகளும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த இரண்டு கிரகங்களுக்கும் அவ்வளவு சக்தி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ராகுவும், சனியும் இணைந்து ஒரு ராஜயோகத்தை உருவாக்குகிறது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களை அளிக்கப்போகிறது.

பரிவர்த்தன ராஜயோகம்
ராகு ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இதன் விளைவாக சில கிரக மாற்றங்கள் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி, இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான் ஆவார். எனவே 2025 வரை இந்த நட்சத்திரத்தில் சனிமற்றும் ராகு இருக்கிறார்கள். எனவே இந்த இரண்டு கிரகங்களும் ஒருவருக்கொருவர் நட்சத்திர அதிபதிகளில் நுழைந்து பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இது சில ராசிகளுக்கு நற்பலன்களை இரட்டிப்பாக்குகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு சனியும் ராகுவும் இணைவதால் ராஜயோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவதோடு, நிதி ஆதாயத்தையும் பெறுவார்கள். மேலும் இந்த லக்னத்தில் சனி 9வது வீட்டிலும், ராகு 10வது வீட்டிலும் உள்ளனர். இதனால் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த பயணங்கள் உங்களுக்கு நிதி நன்மைகளை அளிக்கும். சம்பாதிப்பதற்கு இது சாதகமான நேரம் என்பதில் சந்தேகமில்லை. திருமண வாழ்வில் தம்பதிகளிடையே மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலவும்.
மேஷம்
மேஷ ராசிக்கு சாதகமான பல மாற்றங்கள் வர உள்ளன, இதில் முக்கியமானது அவர்களின் நிதிநிலையில். இது தவிர ராகுவின் தாக்கத்தால், உங்கள் வாழ்க்கையில் நற்பலன்கள் அதிகரிக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக பலன்களைப் பெற பொறுமை காக்க வேண்டியது அவசியம். ராகுவின் ஆசியால் வெளியூர் பயணமும், வெளிநாட்டில் இருந்து வரும் பண ஆதாயமும் கிடைக்க வாய்ப்புள்ளது. இத்தகைய மாற்றங்கள் உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும். வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 11வது வீட்டில் ராகுவும், 10-ம் வீட்டில் சனியும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் ராகுவின் நிலை வலுவாக உள்ளது. இது உங்களுக்கு பல நன்மைகளைத் தரும். மேலும் நிதி விஷயங்களில் எதிர்பாராத பலன்களைப் பெறுவீர்கள்.
குடும்பத்துடன் அதிக நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட முடியும். வியாபாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் உரிய அங்கீகாரத்தைப் பெறலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
