Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
சனி வக்ர நிவர்த்தி அடைவதால் நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
Sani Vakra Nivarthi 2024: வேத ஜோதிடத்தில், நீதிமான் சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இந்த சனி பகவான் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியில் பயணிக்கும் சனி பகவான் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து, தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் நேர்கதியில் பயணிக்கவுள்ளார். சனி வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சனி வக்ர நிவர்த்தி அடைவதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார் இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய யோசனைகளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அதே வேளையில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். சனி பகவானின் ஆசியால் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றத்துடன், நிறைய லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மன வலிமையும், தைரியமும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். நோயால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இரும்பு, எண்ணெய் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், நவம்பர் 15 முதல் ஆரோக்கியம் மேம்படும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். நீண்ட நாட்களாக நடந்து வந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் சனி பகவானின் ஆசியால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் குழந்தையின் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்கலாம். இருப்பினும் சனி பகவான் நல்ல செல்வத்தையும், மகிழ்ச்சியையும் தருவார். தொழிலில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும். தொழில் ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். ஆனால் சனியின் நிலையிலான வருமானம் சற்று குறையும். இதன் விளைவாக அதிகம் டென்சன் ஆகக்கூடும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடப்பதால், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவார்கள். நிதி மற்றும் முதலீடு விஷயங்களில் நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். இருப்பினும் நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்காக நீங்கள் கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடப்பதால் அதிக நற்பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சச ராஜயோகத்தால் ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை வழக்கத்தை விட நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார் இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. இதன் விளைவாக வருமானம் குறைந்து, செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் புதிய மாற்றத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் குறையலாம். இதன் மூலம் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications