Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் மார்ச் முதல் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Sani Peyarchi 2025: வேத ஜோதிடத்தில் சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சனி பகவான் மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஜூன் 03 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் மேஷ ராசிக்கு செல்வார்.

சனியின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நன்கு தெரிவதோடு, நீண்ட காலம் நீடித்திருக்கும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. நீண்ட நாட்களாக வேலையில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆனால் தந்தையின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் திருமணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், நிறைய லாபத்தைப் பெறலாம். நீண்ட தூர பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் அதிகம் சோர்வடையக்கூடும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சனி செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் அனைவராலும் பாராட்டப்படும். அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும் ஆனால் ஜூலை முதல் நவம்பர் வரை ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். சனி பெயர்ச்சிக்கு பின் ஒவ்வொரு பிரச்சனையில் இருந்தும் விடுபடுவீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications