Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
உங்க சகோதரனுக்கு எந்த கலர் ராக்கி கட்றது-ன்னு தெரியலையா? அப்ப அவங்க ராசிக்கு ஏற்ற ராக்கியை கட்டுங்க..
Raksha Bandhan 2025: வட இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பண்டிகை தான் ரக்ஷா பந்தன். இது ஒரு உணர்ச்சிபூர்வமான பண்டிகையாகும். இப்பண்டிகை சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பின் பிரிக்க முடியாத பிணைப்பைக் குறிக்கிறது. இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் சகோதரி தனது சகோதரனின் கையில் ராக்கி என்னும் கயிற்றினை கட்டி விடுவார். மேலும் அவருக்கு வெற்றி, அதிர்ஷ்டம், நீண்ட ஆயுள், செழிப்பு, ஆரோக்கியம் ஆகியவை கிடைக்க வேண்டுமென்றும் வாழ்த்துவார். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சகோதரர் தனது சகோதரிக்கு பரிசை வழங்குவார்.

அதுவும் இந்த ரக்ஷா பந்தன் பண்டிகை அன்று சகோதரி தனது சகோதரனின் ராசிக்கு ஏற்ப சரியான நிறத்தில் ராக்கியை கட்டினால், அது சகோதரனின் வாழ்க்கையில் செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக ஜோதிடம் கூறுகிறது. மேலும் இது சகோதரனின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, அவருடனான உறவை வலுப்படுத்தவும் செய்யும். இப்போது ரக்ஷா பந்தன் நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நிற ராக்கியை கட்டினால் அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய்க்கு உரிய நிறம் சிவப்பு. இந்த சிவப்பு நிறமானது ஆற்றல், உற்சாகம் மற்றும் தைரியத்தால் நிறைந்தது. எனவே உங்கள் சகோதரர் மேஷ ராசியை சேர்ந்தவரானால், அவருக்கு சிவப்பு நிற ராக்கியைக் கட்டுங்கள். இது அவரது வாழ்க்கையை உற்சாகத்தால் நிரப்பும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனுக்கு உரிய நிறம் வெள்ளை. இந்த வெள்ளை நிறமானது அமைதியையும், செழிப்பையும் குறிக்கிறது. எனவே உங்கள் சகோதரர் ரிஷப ராசியை சேர்ந்தவரானால் அவருக்கு வெள்ளை நிற அல்லது வெள்ளி ராக்கியை கட்டுங்கள். இந்த ராக்கி அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வரும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதனுக்கு உரிய நிறம் பச்சை. இந்த பச்சை நிறம் புதிய ஆற்றலையும் செழிப்பையும் குறிக்கிறது. எனவே உங்கள் சகோதரர் மிதுன ராசியைச் சேர்ந்தவரானால், அவருக்கு பச்சை நிற ராக்கியை கட்டுங்கள். இது அவரது புத்திசாலித்தனத்தையும், வணிகத்தில் வெற்றியையும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரனுக்கு உரிய நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்கள். எனவே உங்கள் சகோதரர் கடக ராசியைச் சேர்ந்தவரானால், அவருக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிற ராக்கியை கட்டுங்கள். இது அவரது மன அழுத்தத்தைக் குறைத்து அவரது மனதை அமைதியாக வைத்திருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனுக்கு உரிய நிறம் ஆரஞ்சு மற்றும் தங்க நிறங்கள். எனவே உங்கள் சகோதரர் சிம்ம ராசியை சேர்ந்தவரானால், அவருக்கு ஆரஞ்சு அல்லது தங்க நிற ராக்கியை கட்டுங்கள். இது அவரது நம்பிக்கையையும் கௌரவத்தையும் பலப்படுத்தும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதனுக்கு உரிய நிறம் பச்சை. இந்த பச்சை நிறம் சமநிலையையும் நேர்மறையையும் குறிக்கிறது. எனவே உங்கள் சகோதரர் கன்னி ராசியை சேர்ந்தவரானால் அவருக்கு பச்சை நிற ராக்கியை கட்டுங்கள். இது வாழ்க்கையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த சுக்கிரனுக்கு உரிய நிறம் வெள்ளை மற்றும் வெளிர் நிறங்கள். உங்கள் சகோதரர் துலாம் ராசியைச் சேர்ந்தவரானால், அவருக்கு வெள்ளை அல்லது வெளிர் நிற ராக்கியை கட்டுங்கள். இது உறவுகளில் இனிமையையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய்க்குரிய நிறம் சிவப்பு மற்றும் மெரூன் நிறங்கள். உங்கள் சகோதரர் விருச்சிக ராசியை சேர்ந்தவராயின், அவருக்கு சிவப்பு அல்லது மெரூன் நிற ராக்கியை கட்டி விடுங்கள். இது அவருக்கு தைரியத்தையும் வாழ்க்கையில் வெற்றியையும் தரும்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குருவிற்கு உரிய நிறம் மஞ்சள். இந்த மஞ்சள் மங்களத்தையும் செல்வத்தையும் குறிக்கிறது. உங்கள் சகோதரர் தனுசு ராசிக்காரர் என்றால், அவருக்கு மஞ்சள் நிற ராக்கியை கட்டிவிடுங்கள். இது அவருக்கு அறிவாற்றலையும், நிதி நன்மைகளையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனிக்கு உரிய நிறம் அடர் நீலம். இந்த அடர் நீல நிறமானது வெற்றியையும் நிலைத்தன்மையையும் குறிக்கிறது. எனவே உங்கள் சகோதரர் மகர ராசிக்காரராக இருந்தால், அவருக்கு அடர் நீல நிற ராக்கியை வாங்கி கட்டிவிடுங்கள். இது அவரது வாழ்க்கையில் வலிமையையும் வெற்றியையும் தரும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனிக்கு உரிய நிறங்கள் நீலம் மற்றும் ஊதா நிறங்கள். உங்கள் சகோதரர் கும்ப ராசியை சேர்ந்தவரானால், அவருக்கு நீலம் அல்லது ஊதா நிற ராக்கியை கட்டிவிடுங்கள். இது அவரது முன்னேற்றத்தையும் செழிப்பையும் உறுதி செய்யும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த குருவிற்கு உரிய நிறம் மஞ்சள் மற்றும் தங்க நிறங்களாகும். உங்கள் சகோதரர் மீன ராசியை சேர்ந்தவரானால், அவருக்கு மஞ்சள் அல்லது தங்க நிற ராக்கியை கட்டிவிடுங்கள். இது அவருக்கு வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


