Latest Updates
-
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 05, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வெற்றிகளை குவிக்கப் போறாங்களாம் -
தீபாவளியில் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வருமானம் இரட்டிப்பாகும்! உங்க ராசி இதுல இருக்கா? -
Diwali 2026 Horoscope: இந்த தீபாவளியில் ராஜயோகத்தை பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்!
ராகு-சுக்கிரன் மீன ராசியில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போறது இந்த 3 ராசிக்காரங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன, இந்த ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இரண்டு கிரகங்கள் ஒன்றாக இணைந்து சக்திவாய்ந்த கிரக இணைப்பை உருவாக்குகிறது.
ஜனவரி 28, 2025 அன்று, மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் இணைப்பு நடைபெறப்போகிறது. மீன ராசியில் இரு கிரகங்களும் ஒன்றாக இணைவது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறை விளைவுகளையும், சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தப்போகிறது. இந்த பதிவில் ராகு-சுக்கிரன் இணைப்பால் அதிர்ஷ்டமடையும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் இணைவது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த கிரக இணைவால் ரிஷப ராசிக்காரர்கள் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப்போகிறார்கள், மேலும் அவர்களின் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
சமூகத்தில் அவர்களின் மரியாதை அதிகரிக்கும், அதன் விளைவுகள் குடும்பத்திலேயே தெரியும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் அலுவலகத்தில் உயர் பதவிகளைப் பெறலாம். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் குறித்து அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிரன் சேர்க்கை சாதகமான மாற்றங்களைக் கொடுக்கும். நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிக்க இது சிறந்த காலகட்டமாகும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பபிற்கான பலன்களைப் பெறலாம், மேலும் அவர்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால், அவர்களின் கனவுகள் நனவாகும்.
தங்கள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணர இது சரியான நேரம், மேலும் மக்கள் தங்கள் திறமை மூலம் மகிழ்ச்சியான எதிர்காலத்தை உருவாக்கலாம். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கும், திட்டமிடுவதக்கும் இது சிறந்த நேரமாக இருக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.
விருச்சிகம்
ராகு மற்றும் சுக்கிரன் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களை தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும். இந்த காலகட்டத்தில், விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் மற்றும் அவர்களின் துறையில் பெரிய உயரங்களை அடையலாம். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சிறந்த காலமாக இருக்கும்.
புதிய வருமான ஆதாரங்கள் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம், இது பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். இந்த கிரக இணைப்பின் போது அவர்களின் உடல்நலம் மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

