Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
ராகு சுக்கிர சேர்க்கை: அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்கு வெற்றியும் செல்வமும் குவியும்.. உங்கராசி இதுல இருக்கா
Rahu Venus Conjunction In Pisces 2025: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் நிழல் கிரகமான ராகுவும் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரன் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையும் மே 18 ஆம் தேதி வரை நீடித்திருக்கும்.
ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆரம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் ராகு மறைக்கப்பட்ட ஆசைகள், மர்மமான நிகழ்வுகள், எதிர்பாராத மாற்றங்களின் காரணியாவார். இவ்விரு கிரகங்களும் ஒன்றிணையும் போது, ஒருவரது வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள், வசதிகள், நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றிணைந்திருப்பதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளை பெறுவதோடு, ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகளை காண்பார்கள். இப்போது மீன ராசியில் நிகழ்ந்துள்ள ராகு சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த 11 ஆவது வீடு வருமானம், லாபம் மற்றும் புகழின் வீடாகும். இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மீடியா, இசை, விளையாட்டு அல்லது கலைத் துறையில் இருப்பவர்களுக்கு, மிகவும் சிறப்பாக இருக்கும். குறைவான முயற்சியிலேயே நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் மாறும். நிதி நிலையில் மிகவும் அருமையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் அதிகரிக்கும். கலை, விளையாட்டு அல்லது ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும், லாபமும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். மனநிலை மிகவும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இது செல்வம் மற்றும் பேச்சின் வீடாகும். இந்த வீட்டில் இவ்விரு கிரகங்களும் ஒன்றிணைந்திருப்பதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலையில் நல்ல தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள். இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications