Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இன்று முதல் இருமடங்கு நன்மைகளை அள்ளித் தரப்போகும் ராகு: எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?
Rahu Transit In Yuva Stage 2025: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். தற்போது ராகு தனது நண்பனான சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் ராகு பயணித்து வருவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாகவும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்கலாம்.
அதுவும் ராகு இந்த கும்ப ராசிக்கு மே 18 ஆம் தேதி நுழைந்தார். இந்த ராகு பெயர்ச்சியால் கடந்த 4 மாதங்களாக சிரமங்களை சந்தித்து வந்த ராசிக்காரர்கள், செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். ஏனெனில் இதுவரை ராகு பலவீனமான நிலையில் இருந்தார். ஆனால் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ராகு வலிமையடைந்து, இருமடங்கு நன்மைகளைத் தரப்போகிறார்.

இந்த ராகுவின் நிலை மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதுவும் இதுவரை ராகுவால் கஷ்டப்பட்டு வந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகப் போகிறது. இப்போது ராகுவின் இந்த மாற்றத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ராகுவால் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ராகுவின் பார்வையால் நிறைய செல்வத்தை குவிப்பீர்கள். இருப்பினும் மூன்றாம் நபரின் பேச்சைக் கேட்டு எதையும் செய்யாதீர்கள். இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ராகுவின் பார்வையால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் புத்திசாலியாகவும், தந்திரமாகவும் இருப்பீர்கள். இருந்தாலும் குறுக்கு வழிகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் பல புதிய வழிகள் திறக்கப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் ராகுவால் இன்று முதல் வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவார்கள். ஏனெனில் ராகுவின் பார்வை 11 ஆம் வீட்டில் விழுகிறது. இதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஐடி மற்றும் ஆன்லைன் தொடர்பான வேலையை செய்பவர்கள் நிறைய லாபத்தைப் பெறலாம். இருப்பினும் சைபர் மோசடி செய்வதற்கான வாய்ப்பிருப்பதால் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் சனியின் நிலையால் தொடர்பு கொள்ளும் திறன் மேம்படும். நீதிமன்றம் தொடர்பான வழக்குகளில் சற்று கவனமாக இருந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இக்காலத்தில் இருப்பதால், எந்த வேலையிலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக இன்று முதல் பெரியோர்கள் மதித்து நடந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு இருந்து, இருமடங்கு வலிமை அடைவதால், இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பார்கள். சிலர் புதிய உச்சங்களைத் தொடவும் வாய்ப்புள்ளது. உங்கள் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு, பெரிய இலக்குகளையும் அடைவீர்கள்.
அதுவே மோசமாக இருந்தால், மனதில் பயம், கவலை, குழப்பம் போன்றவை அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புக்களும் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம். இருப்பினும் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல உயர்வையும் காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
