Latest Updates
-
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு? -
1/2 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
இந்தியாவிலுள்ள இந்த கிராமத்திற்குள் இந்தியர்களே நுழையக்கூடாதாம் - இது எந்த நாட்டுக்கு சொந்தம் தெரியுமா? -
ஜூன் 22-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும்.. -
பீன்ஸை பட்டாணியுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க - பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
பாவத்தின் கிரகமான ராகு கும்ப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கை அமோகமாக இருக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில், ராகு ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் நீடித்திருப்பார். தற்போது, ராகு மீன ராசியில் இருக்கிறார். இந்த ராகு 2025 மே 18 ஆம் தேதி சனிபகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் 18 மாதங்கள் வரை, அதாவது டிசம்பர் 05, 2026 வரை கும்ப ராசியிலேயே இருப்பார்.
இந்த முறை கும்ப ராசியில் ராகுவின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறலாம். அவர்கள் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அடையலாம். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியின் பதினொன்றாவது வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அடைவார்கள் மற்றும் அவர்கள் எதிர்பாராத வழியில் வருமானம் உயரும், நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும். அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை எதிர்பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் செய்யும் முதலீடுகள் இப்போது இரட்டிப்பு இலாபத்தைத் தரும், இந்த காலகட்டத்தில் பெரும் லாபத்தை எதிர்பார்க்கலாம். அவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கலாம், இந்த நேரத்தில், அவர்கள் தங்கள் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பைக் காண்பார்கள்.
ரிஷபம்
இந்த ராகு சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன் தருவதாகவும், நேர்மறை மாற்றங்களையும் வழங்குவதாகவும் இருக்கும். இதனால் தங்கள் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் வெற்றி பெறுகிறார்கள். பணியில் இருப்பவர்கள் தங்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றியை எதிர்பார்க்கலாம் மற்றும் அவர்கள் திருப்தியுடன் இருப்பார்கள்.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மற்றும் அவர்களின் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு பணம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பெரிய அதிர்ஷ்டத்தை அளிக்கப்போகிறது. அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், தொழில் துறையிலும் நன்மைகள் கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி முன்னேற்றப் பாதையை அமைத்துக் கொடுப்பதுடன், அலுவலக வேளையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானமும் கூடும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும், அவர்கள் தங்கள் துணையின் முழு ஆதரவையும் எதிர்பார்க்கலாம். திருமண வாழ்க்கையிலும் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன்-மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். சட்ட வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதன் முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம்.
தனுசு
தனுசு ராசியின் மூன்றாவது வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் தனுசு ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. சகோதர சகோதரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். மேலதிகாரிகளுடான உங்கள் உறவு பலப்படும். தன்னம்பிக்கையின் அடிப்படையில் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும்.
பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும், மேலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சில பெரிய வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. அவர்கள் தங்கள் நிதி நிலையை வலுப்படுத்தக்கூடிய நிதி நன்மைகளை எதிர்பார்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
