Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
18 ஆண்டுகளுக்கு பின் சனி பகவானின் ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Rahu Transit In Aquarius 2025: வேத ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகும். கிரகங்களில் சனி பகவானுக்கு அடுத்தபடியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பவர் என்றால் அது ராகு தான். இந்த ராகு ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் கிரகங்களிலேயே ராகு பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர் மற்றும் ராகுவிற்கு சொந்தமாக எந்த ராசியும் இல்லை.
தற்போது ராகு மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ராகு வருகிற மே 18 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். சுமார் 18 மாதங்களுக்கு பின் ராசியை மாற்றும் ராகு, தனது நண்பனின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கும்ப ராசியில் ராகு 2026 டிசம்ர் 05 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் திடீர் நிதி நன்மைகளைப் பெறுவதோடு, தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது ராகு பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் கர்ம வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு சம்பள உயர்வுக்கான வாய்ப்பும் உள்ளது. வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நிதி திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். கலைத் துறையில் இருப்பவர்கள் நல்ல புகழையும், மரியாதையையும் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் வீரம் மற்றும் தைரிய வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், வீரமும் மே 18 முதல் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்புறவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ராகுவின் ஆசியால் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் நிதி நிலை வலுவடையும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிர்ஷ்ட வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications