Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
ராகு 2025-ல் கும்ப ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை வாழ்க்கையில் கெட்ட நேரம் துரத்தப்போகுதாம்...!
ராகு பொதுவாக நிழல் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. எனவே ராகுவின் ஒவ்வொரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிழல் கிரகத்தின் பெயர்ச்சி சில சமயங்களில் நேர்மறை பாதிப்புகளையும், சில சமயங்களில் எதிர்மறை பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ராகுவின் நிலை மற்றும் பலத்தின் அடிப்படையில் ஒருவரின் தலைவிதி முடிவு செய்யப்படுகிறது. ராகு எந்த அளவுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறாரோ அதைவிட அதிகமாக மோசமான பலன்களைத் தரக்கூடியவர்.
2025 ஆம் ஆண்டு இன்னும் 2 மாதங்களில் வரவிருக்கிறது. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு சனி பகவானின் ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கிரக பெயர்ச்சி சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தப்போகிறது. ராகுவின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், நிதி நெருக்கடிகளையும் சந்திக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
கும்ப ராசியில் ராகுவின் பிரவேசம் மேஷ ராசியினருக்கு பல மோசமான மாற்றங்களைத் தரப்போகிறது. பெரும்பாலும் உங்கள் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். குறிப்பாக வருமானம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை வரும். இது நிதிரீதியாக மட்டுமல்ல, வேலையையும் பாதிக்கும்விஷயங்களும் நடைபெற வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்கு நஷ்டம் அதிகரிக்கும், உங்களின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவதற்கு வாய்ப்புள்ளது. எதிர்பாராத செலவுகள் உங்கள் சேமிப்பைக் கரைக்கலாம். குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே, வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் ராகுவின் நுழைவு எதிர்மறையான பலன்களை உருவாக்குகிறது. வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் அலுவலக்தில் எழும் கருத்து வேறுபாடு பெரும்பாலும் உங்கள் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். குடும்பத்தில் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் தடைபடலாம், அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை.
ஆரோக்கியத்தை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். விஷயங்கள் மேலும் தீவிரமான சூழ்நிலைக்கு மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஆபத்தான நிலைக்குச் செல்லும், இது விஷயங்களைச் சரியாகக் கையாள முடியாத சூழ்நிலையில் உங்களைத் தள்ளலாம். நிதிரீதியாக பெரும் பின்னடைவு ஏற்படலாம்.
மீனம்
மீன ராசியினருக்கு கும்ப ராசிக்கு ராகு செல்வது நல்லதல்ல. உடல்ரீதியான மற்றும் மனரீதியான அசௌகரியங்கள் உங்களை விடாமல் பின்தொடர்கின்றன. மேலும் வியாபாரத்தில் பல தடைகள் ஏற்படும். பலருக்கு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் திணறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் தப்பிக்க முடியாத பிரச்சினைகளில் சிக்க வைக்கும் காலம் இது.
செலவுகள் எதிர்பார்ப்பதை விட மிகவும் அதிகரிக்கலாம். தலைவலி போன்ற உடல் உபாதைகள் அதிகரிக்கும். நிதி நிலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையை மோசமாக பாதிக்கும். எனவே இந்த காலத்தில் முடிந்தவரை மிகவும் கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

