Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
18 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் ராகு-புதன் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..
Rahu Mercury Conjunction 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கின்றன. இந்த கிரகங்களின் இயக்கங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் 2025 புத்தாண்டில் நுழையவுள்ளோம்.
இந்த புத்தாண்டில் பல கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளது. அதில் நிழல் கிரகமான ராகு ஏற்கனவே மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த மீன ராசிக்குள் புத்திகாரகனான புதனும் நுழையவுள்ளார். அதுவும் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் பிப்ரவரி 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் பிப்ரவரியில் புதன் மற்றும் ராகுவின் சேர்க்கை நிகழவுள்ளது.

இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக நல்ல நிதி நன்மைகளும், வெற்றிகளும் கிடைக்கப் போகிறது. இப்போது ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். எதில் முதலீடுகளை செய்தாலும், அதில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்தும் நிறைய லாபம் கிடைக்கும். பணத்தை அதிகம் சேமிக்க முடியும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் பெருகும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தரும். நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும், பணத்தை சேமிக்கவும் முடியும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் தங்கள் கூட்டாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் புகழும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications