Latest Updates
-
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம்
போகி நாளில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Pongal 2026: வேத நாட்காட்டியின் படி, 2026 ஆம் ஆண்டின் போகி பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி வருகிறது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இந்த போகி நாளன்று மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள பழைய உபயோகப்படுத்தாத பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை அழகாக மாவிலை தோரணம், கோலம் போன்றவற்றால் அலங்கரிப்பார்கள்.
இந்த ஆண்டின் போகி பண்டிகை சற்று சிறப்பானது. ஏனெனில் இந்த நாளில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும், கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். அதுவும் இந்த இரண்டு கிரகங்களும் சனி பகவானின் மகர ராசியில் ஒன்றிணைகின்றனர். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் சக்தி வாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. மேலும் வேலையில் வெற்றியும், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது பொங்கல் பண்டிகையின் போகி நாளில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்ராதித்ய ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். ஏனெனில் இந்த ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளால் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
சுக்ராதித்ய ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். ஏனெனில் இந்த ராஜயோகம் 9 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தலைமைத்துவ திறன் மேம்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மகரம்
சுக்ராதித்ய ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கப்போகிறது. ஏனெனில் இந்த ராஜயோகமானது முதல் வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை மேம்படும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சமூகத்தில் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications