Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
பொங்கல் நாளில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த யோகம்: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Pongal 2025: ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகை சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் ஒரு சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகியுள்ளன. அதுவும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் மற்றும் தேவர்களின் குருவான குருபகவானின் நிலைகளால் அர்த்தகேந்திர யோகம் உருவாகியுள்ளது. பொங்கல் நாளன்று செவ்வாய் கடக ராசியிலும், குரு ரிஷப ராசியிலும் உள்ளனர்.
இவ்விரு கிரகங்களின் நிலைகளால் பொங்கல் நாளில் சக்தி வாய்ந்த அர்த்தகேந்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது அர்த்தகேந்திர யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர யோகமானது பலவிதமான நன்மைகளை வழங்கும். அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைப்பதோடு, நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உறவுகளில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் குருவின் நிலையால் உருவான அர்த்தகேந்திர யோகத்தால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். ஆனால் வியாபாரிகள் எந்த முடிவையயும் எடுக்கும் முன் கவனமாக சிந்திக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொங்கல் நாளில் செவ்வாய் குருவால் உருவாகியுள்ள அர்த்தகேந்திர யோகமானது பல நன்மைகளைத் தரும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலர் வேலை மாற்றத்தை சந்திக்கலாம் இதன் மூலம் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். ஆனால் நிறைய செலவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர யோகமானது அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நல்ல நிதி ஆதாயங்களையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். செவ்வாயின் ஆசியால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் பல வேலையில் வெற்றியைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். குருவின் ஆசியால் வாழ்வில் பல வகையான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications