Latest Updates
-
தேங்காய்ப் பாலை இந்த மாதிரி யூஸ் பண்ணுனா உங்கள் முடி சரசரனு ஆரோக்கியமா வளருமாம் - ட்ரை பண்ணுங்க -
செட்டிநாடு பச்சை மாங்காய் வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
2025-ல் ஏழரை சனியில் சிக்கும் மீன ராசிக்காரர்கள்.. இந்த விஷயங்களில் எல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும்...
Pisces Horoscope 2025 In Tamil: 2025 ஆம் ஆண்டு பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. சனி, ராகு கேது, குரு பெயர்ச்சியாலும், நவகிரகங்களின் பயணத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது? பொருளாதார நிலை எப்படி இருக்கும். நல்ல வேலை கிடைக்குமா? குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார்.
ஏழரை சனியில் விரைய சனி முடிந்து ஜென்ம சனி காலம் தொடங்கப்போகிறது. ஜென்ம ராகு விலகுவதால் மன குழப்பங்கள் நீங்கும். குரு பகவானின் பயணமும் பார்வையும் சாதகமாக இருப்பதால் 2025ஆம் ஆண்டில் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மார்ச் இறுதி முதல் ஏழரை சனி காலத்தில் ஜென்ம சனி தொடங்கப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 5 ஆம் இடங்களில் பயணம் செய்யப்போகிறார். ராகு 12 ஆம் வீட்டிற்கும் கேது 6 ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் பாதிப்புகள் குறையப்போகிறது.
வேலை, தொழில்
சனி பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்து ஜென்ம ராசிக்கு வந்து அமரப்போகிறார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அதிக அளவில் பண விரையத்தை பார்த்திருப்பீர்கள். மார்ச் முதல் சனிபகவான் உங்கள் ராசிக்குள் வந்து அமரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை உங்களுடைய வேலையை யாரை நம்பியும் ஒப்படைக்காதீர்கள். ஜென்ம சனி காலம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்யும் முன்பாக முன் யோசனை செய்வது அவசியம். மே மாதத்திற்குப் பிறகு நல்ல வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வும் கிடைக்கும்.
பொருளாதார நிலை
பண விசயங்களில் அதிக கவனம் தேவைப்படும். யாரை நம்பியும் பணத்தை கடன் வாங்கி தர வேண்டாம். பண விசயத்தில் உறவினர்களுக்கு ஜாமின் கையெழுத்து போடாதீர்கள். குருபகவான் ஆண்டு முழுவதும் சாதகமான இடங்களில் பயணம் செய்வதால் திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் உற்சாகத்துடன் இருப்பீர்கள்.
குடும்பம்
சுக ஸ்தான குரு உங்கள் ராசிக்கு 8,10,12ஆம் வீடுகளை பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும் வருமானத்தை பத்திரப்படுத்துங்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைந்து குரு பலன் வரப்போவதால் திருமண சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
பெண்கள்
பெண்களுக்கு மன குழப்பமான கால கட்டம். ஜென்ம ராகு விலகினாலும் ஜென்ம சனி காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். உங்களுடைய வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சின்னச் சின்ன பிரச்சினைகளை ஊதி பெரிதாக்க வேண்டாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மே மாதத்திற்குப் பிறகு ராகு கேது இடப்பெயர்ச்சி அடையப்போவதால் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு மீனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. ஜென்ம சனி காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெற வேண்டுமெனில் சனிக்கிழமை சனி ஹோரையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஞாயிறுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது பாதிப்புகளை குறைத்து நன்மையை அதிகரிக்கும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











