Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
இந்த 5 ராசிக்காரங்க சொந்தமா தொழிலை தொடங்குனா கொடிகட்டி பறப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Most Successful Signs in Business: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும், திறமைகளும் வேறுபட்டிருக்கும். இதற்கு அந்த ராசிக்காரர்களின் அதிபதிகள் தான் காரணம். அதில் சில ராசிக்காரர்கள் படைப்பாற்றல், ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ திறன்கள் போன்ற குணங்களைக் கொண்டிருப்பார்கள். இந்த குணங்களைக் கொண்டவர்கள் எப்போதும் தொழிலில் தலைச்சிறந்து விளங்குவார்கள்.
நிறைய பேருக்கு சொந்தமாக தொழிலை தொடங்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தொழிலைத் தொடங்கும் அனைவரும் வெற்றியைப் பெறுவதில்லை. சில ராசியைச் சேர்ந்தவர்களே தங்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள். அதுவும் கடின உழைப்பாளிகள், ஒரு விஷயத்தில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்கள் தொழிலை தொடங்கினால், அவர்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

ஜோதிடத்தில் சில ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களுடன் ஒப்பிடும் போது, தொழிலில் நல்ல வெற்றியைப் பெறக்கூடியவர்களாக கருதப்படுகின்றனர். இது ஒருவரது தனிப்பட்ட உந்துதல் மற்றும் உறுதியைப் பொறுத்து மாறுபடும். சில ராசிக்காரர்கள் பேசுவதில் வல்லவர்களாக மற்றும் தலைமைத்துவத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் எந்த ராசியை சேர்ந்வர்கள் தொழிலில் கொடிகட்டி பறப்பார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் துணிச்சல், தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த ராசியை சேர்ந்தவர்கள் பிறவியில் இருந்தே சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். மிகவும் தைரியமானவர்கள், சுறுசுறுப்பானவர்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதை விரும்புவார்கள். போட்டி நிறைந்த வாழ்க்கைக்கு ஏற்ற குணங்களை இந்த ராசிக்காரர்கள் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒருபோதும் தங்கள் வார்த்தைகளிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். ரிஸ்க் எடுக்க சற்றும் தயங்கமாட்டார்கள். எப்போதும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பார்கள். முக்கியமாக சற்றும் பயப்படாமல் எந்த முடிவுகளையும் எடுப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் கவர்ச்சிகரமான மற்றும் படைப்பாற்றல் மிக்க ஆளுமை கொண்டவர்கள் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இவர்கள் சிறந்த தலைவர்கள். இவர்களின் வலுவான ஆளுமை மற்றவர்களை எப்போதும் ஈர்க்கும் வகையில் இருக்கும். ஒரு தலைமை பொறுப்பை ஏற்ற நினைப்பவர்களுக்கு இப்படியான பண்புகள் அவசியம் இருக்க வேண்டும். சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் அங்கீகாரம் மற்றும் வெற்றிக்கான ஆசையைக் கொண்டிருப்பார்கள். இதுவே அவர்களை தொழிலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வைக்கிறது.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரத்தின் காரணியாவார். கன்னி ராசிக்காரர்கள் வலுவான பகுப்பாய்வு திறன்களைக் கொண்டுள்ளனர் மற்றும் நடைமுறை சிந்தனையாளர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களின் பகுப்பாய்வு திறன் தான் இவர்களை தொழிலில் சிறந்து விளங்க உதவுகிறது. மேலும் இவர்கள் குறிப்பிட்ட துறைகளில் உறுதியாக இருப்பார்கள் மற்றும் முயற்சிகளால் வெற்றியின் உச்சத்தை அடைவார்கள். தொழில் வாழ்க்கையில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். சிக்கலான பணிகளை எளிதாக முடிப்பார்கள். ஒவ்வொரு வேலையையும் விவரங்களை கூர்ந்து கவனித்து செய்வார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த சனி ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் காரணியாவார். இந்த மகர ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் வேலையில் சிறந்த முயற்சியுடன் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறத் தயாராக உள்ளனர். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை முடிக்காமல் ஓயமாட்டார்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள் ஒழுக்கமான இயல்புடையவர்கள். சவால்களை எதிர்கொள்ள தயங்கமாட்டார்கள். சரியாக திட்டமிட்டு இலக்குகளை அடைவார்கள். இதுவே அவர்களை தொழிலில் மிகவும் சிறந்தவர்களாக்குகிறது. மேலும் இவர்கள் உறுதியானவர்கள், வேலையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். எப்போதும் வெற்றியை நோக்கி செல்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாவார். இதனால் இந்த ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் வேலையில் மிகவும் உறுதியுடன் இருப்பார்கள். தங்கள் வேலையில் வெற்றி அடைய சரியான திட்டங்களை தீட்டுவார்கள். வலுவான நோக்கத்தைக் கொண்டிருப்பார்கள் மற்றும் பல தடைகள் இருந்தபோதிலும் தங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் மக்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள், இது அவர்களை மிகவும் சாதுர்யமான பேச்சுவார்த்தையாளர்களாக ஆக்குகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











