Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ரொம்ப ரொம்ப நேர்மையானவர்களாக இருப்பார்களாம்... உங்க நட்சத்திரம் என்ன?
அனைத்து மனிதர்களிடமும் இருக்க வேண்டிய ஒரு அவசியமான மற்றும் நல்ல குணங்களில் ஒன்று நேர்மையாகும். துரதிர்ஷ்டவசமாக இந்த அத்தியாவசிய குணம் இப்போது அரிய குணமாக மாறிவருகிறது. நேர்மையான மக்களை பார்ப்பதே இப்போது அரிதாகி வருகிறது, ஆனாலும் விதிவிலக்காக நேர்மையான மக்கள் சிலர் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் விதிவிலக்காக நேர்மையின் உருவமாக இருப்பார்கள். பிறந்த நேரத்தைப் பொறுத்து நட்சத்திரங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமென சில தனிப்பட்ட குணாதிசயங்கள் உள்ளன. அதில் நேர்மை மிகவும் முக்கியமான குணமாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

அஸ்வினி
அஸ்வினி நட்சத்திரங்கள் வாழ்க்கை முழுவதும் நேர்மையாக இருப்பவர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள். தங்களுடன் இருப்பவர்களை ஒருபோதும் ஏமாற்றாத நேர்மையாளர்கள் இவர்கள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உண்மையை மட்டுமே சொல்ல விரும்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மை, தர்மம் மற்றும் நீதியைத் தவிர வேறு எதையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற மாட்டார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் எந்த பிரச்சனை நேர்ந்தாலும் எப்போதும் உண்மையுடன் பக்கமே நிற்பார்கள்.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் நியாயத்தின் பக்கம் மட்டுமே நின்று செயல்படக்கூடியவர்கள். நீதிக்காக நிற்க விரும்பும் நட்சத்திரங்களாக இருப்பதால், அவர்கள் தங்களிடம் பொய் சொல்பவர்களை வெறுக்கிறார்கள், அவர்கள் பொய் சொல்வதையும் வெறுக்கிறார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் எப்போதும் நேர்மையானவர்களாக இருப்பதால் எளிதில் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்கள் பொருளாதார பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் வாய்ப்பும் அதிகம்.
உத்திராடம்
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக எந்த சூழ்நிலையிலும் துணையாக நிற்பவர்கள். அவர்கள் காதல் உறவில் இருக்கும் போது அதீத நேர்மை மற்றும் தாராள குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் காதல் என்ற பெயரில் அவர்கள் ஏமாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து நிதி சிக்கல்களையும் தீர்க்கும் சிறப்பு திறன் கொண்டவர்கள்.
பூசம்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் அதன் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களாக இருப்பார்கள். எதை செய்வது அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் நன்மைப்பயக்கும் என்று ஆராய்ந்த பிறகுதான் ஒவ்வொரு காரியத்தையும் செய்வார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் பொதுவாக அனைவருக்கும் நன்மை பயக்கும் விஷயங்களைச் செய்வதில் ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள். தங்களின் வளர்ச்சியைப் போலவே தன்னை சார்ந்தவர்கள் வளர்ச்சியும் இருக்க வேண்டுமென்று உண்மையிலேயே விரும்புவார்கள்.
மிருகசீரிஷம்
அனைவரையும் சமமாக நேசிக்கும் இதயம் கொண்டவர்களாக மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருப்பார்கள். யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ விரும்பும் நட்சத்திரக்காரர்கள் இவர்கள். அவர்கள் மீது தவறு இருந்தால், அதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள பயப்பட மாட்டார்கள். எப்போதும் நேர்மையையும், உண்மையையும் விரும்பும் இவர்கள் வாழ்க்கையில் உண்மைக்கும் நீதிக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

