Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள பங்குனி மாதமானது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா?
Sun Transit In Pisces On March 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், இதுவரை சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் பயணித்து வந்தார்.
இந்நிலையில் சூரியன் மார்ச் 14 ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் சூரியன் அடுத்த ஒருமாத காலம் பயணிப்பார். முக்கியமாக சூரியன் மீன ராசியில் நுழைந்ததால், தமிழ் மாதமான பங்குனி பிறந்துள்ளது. மீன ராசியில் சூரியன் நுழைந்ததால், பல்வேறு யோகங்கள் உருவாகியுள்ளன.

மேலும் சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சூரிய பெயர்ச்சியால் பிறந்துள்ள பங்குனி மாதத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு கலவையானதாக இருக்கும். இக்காலத்தில் தைரியம் அதிகரிக்கும் மற்றும் வேலை செய்யும் திறனும் அதிகரிக்கும். ஆனால் பணியிடத்தில் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதமானது மங்களகரமானதாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். வெற்றிக்கான புதிய கதவுகள் திறக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். சொல்லப்போனால் வழக்கத்தை விட பண வரவு அதிகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் பங்குனி மாதமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சுமாராக இருக்கும். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இருப்பினும் பேச்சால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளதால், பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் அதிர்ஷ்டமானது என்பதை நிரூபிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் சம்பள உயர்வு திடீரென்று கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதமானது அவ்வளவு நன்றாக இருக்காது. நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காரணமின்றி சண்டை மற்றும் தகராறு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதைக் கையாள்வது சற்று கடினமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் பங்குனி மாதத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலில் நிறைய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் இலக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் தனுசு ராசிக்காரர்கள் பங்குனி மாதத்தில் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் நிதி நிலைமை இம்மாதத்தில் சற்று சுமாராக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளில் வழக்கத்தை விட கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பல நல்ல செய்திகளை இம்மாதத்தில் பெறக்கூடும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பங்குனி மாதம் நன்றாக இருக்கும். இம்மாதத்தில் சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் மீன ராசிக்காரர்கள் பங்குனி மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். சூரியனின் ஆசியால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஆன்மா, உயிர், சுய வெளிப்பாடு, ஈகோ, அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் தந்தையைக் குறிக்கிறது. மேலும் இது ஒருவரின் தொழில், ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உயிர் சக்தியையும் குறிக்கிறது.
மீன ராசியின் அதிபதி வியாழன் என்னும் குரு பகவான் ஆவார். இந்த குரு பகவான் ஞானம், வளர்ச்சி ஆகியவற்றின் காரணியாவார். நவ கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான்.



Click it and Unblock the Notifications











