Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கையில் ஹன்ஸ் யோகம் உருவாகி இருந்தா.. பணக்காரர் ஆவாங்களாம்.. உங்க கையில இருக்கா-ன்னு பாருங்க...
Palmistry: ஜோதிடத்தின் ஒரு கிளை தான் கைரேகை ஜோதிடம். இந்த வகை ஜோதிடத்தில் ஒருவரது கையில் உள்ள ரேகைகள், மேடுகள் மற்றும் அடையாளங்களைக் கொண்டு, அந்நபரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கணிக்கலாம்.
ஒருவரது கையில் ஏராளமான சில முக்கிய ரேகைகளும், சின்னங்களும் உள்ளன. இவை ஒருவரது கையில் ராஜயோகங்களை உருவாக்கி, அந்நபரை அனைத்து இன்பங்களையும் பெற வைத்து, செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ வைக்கிறது. அதுமட்டுமின்றி, அந்த யோகங்கள் வாழ்க்கையில் மரியாதையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருகின்றன.

கைரேகை ஜோதிடத்தில் ஏராளமான யோகங்கள் உள்ளன. அதில் ஒரு மங்களகரமான யோகம் தான் ஹன்ஸ் யோகம். இந்த யோகம் யாருடைய கையில் உள்ளதோ , அந்நபர் அனைத்து வசதிகளையும் பெற்று, பணக்காரர் ஆவார். இப்போது ஹன்ஸ் யோகா எப்படி உருவாகிறது மற்றும் அது எப்படிப்பட்ட பலன்களைத் தரும் என்பதைக் காண்போம்.
ஹன்ஸ் யோகா கையில் எப்படி உருவாகிறது?
யாருடைய ஆள்காட்டி விரல், மோதிர விரலை விட உயரமாக இருந்து, குரு மேடு முழுமையாக வளர்ந்து, அதில் சிலுவை அடையாளத்தைத் தவிரை வேறு எந்த அடையாளமும் தெரியாமல் இருந்தால், அந்நபரின் கையில் ஹன்ஸ் யோகம் உருவாகியுள்ளது என்று அர்த்தம்.
ஹன்ஸ் யோகத்தால் பெறும் நன்மைகள்
எவருடைய உள்ளங்கையில் ஹன்ஸ் யோகம் உருவாகியுள்ளதோ, அந்நபர் மற்றவர்களை ஈர்க்கும் வகையிலான ஆளுமையைக் கொண்டிருப்பார். மேலும் இவர்களுக்கு பண ஆசை அதிகாமக இருக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களாக இருப்பர். செல்லும் இடங்களில் மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள். முக்கியமாக சிறு வயதிலேயே பணக்காரர் ஆவார்கள். நல்லொழுக்கத்தைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக கடவுள் நம்பிக்கையை அதிகம் கொண்டிருப்பார்கள்.
இது யார் உருவாக்கும் யோகம்?
ஹன்ஸ் யோகம் குரு பகவானால் உருவாகிறது. இந்த ராஜயோகமானது பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகம் ஒருவரது கையில் இருந்தால், அந்நபர் உண்மையை விரும்புவார்கள். எப்போதும் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள். உறவுகளை சிறப்பாக பேணுவார்கள். பணத்தை சேமிப்பதில் வல்லவர்கள். கடினமாக உழைக்கக்கூடியவர். தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பார்கள்.
இந்த யோகம் கொண்டவர்கள் குறுக்கு வழியில் எதையும் அடைய விரும்பாமல், தனது உழைப்பால் வாழ்க்கையில் முன்னேற விரும்புவார்கள். அந்த கடின உழைப்புக்கு ஏற்ப நல்ல பலனையும் பெறுவார்கள். மொத்தத்தில் இந்த யோகத்தை கையில் கொண்டவர்களுக்கு பண பஞ்சமே இருக்காது. பண பிரச்சனைகளை இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கவேமாட்டார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications