அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

October 2026 Planetary Transits: அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. பொதுவாக ஒரு புதிய மாதம் தொடங்கும் போது, அந்த மாதம் பற்றிய எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருக்கும். அதுவும் இந்த புதிய மாதத்திலாவது வாழ்வில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுவிடாதா என்ற எண்ணம் இருக்கும். ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் கிரகங்களின் நிலைகளாலும், அவற்றின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்களாலும் பல ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.

October 2026 Planetary Transits List Of Lucky Zodiac Signs

அதுவும் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்திலேயே யோகங்கள் உருவாகி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது 2026 அக்டோபர் மாதத்தில் எந்த கிரகம் எந்த யோகத்தை உருவாக்கவுள்ளது, அந்த யோகங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

புதாதித்ய ராஜயோகம்

அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அந்த ராசியில் ஏற்கனவே புதன் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகும்.

லட்சுமி நாராயண ராஜயோகம்

அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் அக்டோபர் முழுவதும் துலாம் ராசியில் பயணிப்பார். அப்போது புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியான புதனும் இந்த ராசியில் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியிருக்கும்.

மாளவ்ய ராஜயோகம்

அக்டோபரில் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணிக்கும் போது, பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களுள் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இப்படி சொந்த ராசியில் சுக்கிரன் பயணிப்பதால், சில ராசிக்காரர்களுக்கு வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் தீர்ந்து, செல்வம் பெருகப் போகிறது.

திரிகிரக யோகம்

மனத்தின் காரணியாக கருதப்படும் சந்திரன் அக்டோபர் 04 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைவார். அப்போது அந்த ராசியில் ஏற்கனவே குரு பகவானும், செவ்வாயும் இருப்பார்கள். இப்படி இந்த மூன்று கிரகங்களும் கடக ராசியில் ஒன்றிணைந்து பயணிப்பதால், மங்களகரமான திரிகிரக யோகம் உருவாகும்.

குரு பெயர்ச்சி

தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். குருவும், சூரியனும் நட்பு கிரகங்கள் என்பதால், இந்த பெயர்ச்சியானது ஒரு மங்களகரமான சூழ்நிலையை உருவாக்கும். முக்கியமாக இந்த சிம்ம ராசியில் தான் கேதுவும் பயணித்து வருகிறார். இதனால் கேது மற்றும் குரு பகவானின் சேர்க்கையும் நிகழவுள்ளது.

அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

கடகம்

அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, எதிர்பார்த்த இடமாற்றம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை இம்மாதம் அதிகரிக்கும். பண பிரச்சனைகள் நீங்கி, புதிய வருமான வழிகள் உருவாகும்.

சிம்மம்

அக்டோபர் மாத கிரக பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை கொண்டு வரும். வேலைகள் ஒவ்வொன்றும் சிறப்பாக முடிவடையும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது அற்புதமான மாதமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய திட்டங்கள் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். கூட்டு தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது அட்டகாசமாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மூலம் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் தலைமைத்துவ குணங்கள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு இம்மாதத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 28, 2026, 10:38 [IST]
Desktop Bottom Promotion