Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
October 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.

2026 ஆம் ஆண்டின் முதல் மாதமான அக்டோபர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 அக்டோபர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எண் 1
1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் தங்கள் துறைகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மேலும் இம்மாதத்தில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதோடு இம்மாதத்தில் உங்களின் திறமைகளை கண்டறிந்து, அதை வெளிக்கொணர்வீர்கள். எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
எண் 2
2, 11, 20 அல்லது 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் சிறப்பானதாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். தொழில் ரீதியாக இம்மாதம் அற்புதமாக இருக்கும். வணிகர்களுக்கு இம்மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
எண் 3
3, 13, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் செல்வாக்குமிக்கதாக இருக்கும். உங்களின் திறமைகளை வெளிக்காட்டி நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். பேச்சுத்திறன் ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
எண் 4
4, 13, 22 அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படலாம். இதன் மூலம் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நிதி நிலையும் படிப்படியாக மேம்படும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும்.
எண் 5
5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் வணிகத்தில் நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
எண் 6
6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊடகம், ரியல் எஸ்டேட் மற்றும் அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
எண் 7
7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதம் புதிய யோசனைகள் நிறைந்ததாக இருக்கும். எதிர்காலம் குறித்த பல முடிவுகளை எடுப்பீர்கள். புதிதாக ஒன்றை தொடங்குவதற்கு இம்மாதம் உகந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் படைப்பாற்றல் மூலம் பல திட்டங்களில் வெற்றி பெறுவார்கள். இம்மாமத்தில் உங்களின் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும்.
எண் 8
8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதனால் பல ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளக்கூடும். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். உங்களின் வார்த்தைகள் மற்றவர்களால் மதிக்கப்படும். முக்கியமாக இம்மாதத்தில் உங்களை நீங்கள் பரிசோதனை செய்வீர்கள்.
எண் 9
9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அக்டோபர் மாதத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு அவசரமான நடவடிக்கைகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் இம்மாதத்தில் புதிய வேலைகளை தொடங்கலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கடின உழைப்பின் பலன் கிட்டும். மன அழுத்தம் குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
