Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள்.. அவங்க அப்பாவுக்கும், கணவருக்கும் அதிர்ஷ்ட தேவதைகளாம்..
Numerology: இவ்வுலகில் பிறந்த அனைவருமே அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், சிலர் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றத்தையும் காணாமல் இருப்பர். ஆனால் அப்படிப்பட்டவர்கள் ஒருகட்டத்தில் அவர்களது வாழ்க்கையில் புதிதாக ஒரு பெண் நுழையும் போது, அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் கண்டு உச்சத்தை அடைந்திருப்பார்கள்.
குறிப்பாக ஒரு தந்தை மகள் பிறந்த பின் அனைத்து செல்வங்களையும் பெறத் தொடங்குவார். அதேப் போல் திருமணத்திற்கு பின் சில ஆண்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதற்கு அந்த பெண்ணின் பிறந்த தேதி காரணமாக இருக்கலாம்.

ஜோதிடத்தின் ஒரு கிளையான எண் கணிதத்தில் ஒரு மாதத்தின் குறிப்பிட்ட 4 தேதிகளில் பிறந்த பெண்கள் தங்கள் அப்பாவுக்கும், கணவருக்கும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் ஒரு ஆணின் வாழ்க்கையில் வந்த பின், அந்த ஆணுக்கு அனைத்து விதமான பொருள் இன்பங்கள் கிடைத்து, வாழ்க்கை வேற லெவலில் செல்வதாக கூறப்படுகிறது. இப்போது எந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் அவரது தந்தைக்கும், கணவருக்கும் அதிர்ஷ்ட தேவதைகள் என்பதைக் காண்போம்.
பிறந்த தேதி 3
ஒரு மாதத்தின் 3 ஆம் தேதியில் பிறந்த பெண்கள் ஞானம், வளர்ச்சி, நல்ல அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படும் குரு பகவானின் ஆசியைப் பெற்றவர்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவர்களின் குடும்பத்திற்கு அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகின்றனர். இந்த தேதியில் குழந்தை பிறந்த பெண் குழந்தை, அவர்களின் தந்தைக்கு நிறைய செல்வத்தை கொண்டு வருவார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்து இருப்பார்கள் மற்றும் இவர்கள் இருக்கும் இடம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் இந்த தேதியில் பிறந்த பெண்களைச் சுற்றி நேர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருப்பதால், இவர்களின் தந்தை மற்றும் கணவருக்கு வெற்றியைத் தரும் அதிர்ஷ்ட தேவதைகளாக திகழ்கின்றனர்.
பிறந்த தேதி 12
ஒரு மாதத்தின் 12 ஆவது தேதியில் பிறந்த பெண்கள் சூரியன் மற்றும் குருவின் ஆசியைப் பெற்றிப்பார்கள். மேலும் இந்த தேதியில் பிறந்த பெண்கள் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து மற்றும் அதிர்ஷ்ட தேவதைகளாக இருப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவர்கள் தந்தைக்கு பெருமையை தேடி தருவார்கள். பல சாதனைகளைப் புரிவார்கள். மேலும் இந்த பெண்கள் அதிர்ஷ்டத்தை மட்டும் ஈர்ப்பவர்கள் அல்ல. இவர்கள் வலிமையானவர்கள் மற்றும் நல்ல ஆதரவாக இருப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்களை தங்கள் வாழ்க்கையில் கொண்ட ஆண்கள் அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நிறைய வெற்றி யையும், மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள்.
பிறந்த தேதி 21
ஒரு மாதத்தின் 21 ஆம் தேதியில் பிறந்த பெண்கள் நல்ல படைப்பாற்றலைக் கொண்டு யதார்த்தமான ஒருவராக இருப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவர்கள் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்து, வீட்டில் உள்ளோரை பெருமைப்படுத்துவார்கள். முக்கியமாக இந்த தேதியில் பிறந்த பெண் பிள்ளைகளைக் கொண்ட ஆண்கள், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவதோடு, நிறைய வெற்றிகளையும் பெறுவார்கள். அதுவும் இந்த பிறந்த தேதியைக் கொண்ட பெண்ணை திருமணம் செய்த ஆண்கள், அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த வகை பெண்கள் தங்கள் கணவருக்கு எந்த சூழ்நிலையிலும் ஆதரவாகவும், விசுவாசமாகவும் இருப்பார்கள்.
பிறந்த தேதி 30
ஒரு மாதத்தின் 30 ஆம் தேதியில் பிறந்த பெண்கள் செவ்வாய் மற்றும் குருவின் ஆசியைப் பெற்றிருப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண் பிள்ளைகளைக் கொண்ட தந்தைகள், தனது மகளின் லட்சிய மனப்பான்மையால் வாழ்க்கையில் லட்சியத்தை அடைய தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று, குறுகிய காலத்தில் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதேப் போல் இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் தனது கணவருக்கு அதிர்ஷ்ட தேவதைகளாக, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொண்டு வருவார்கள். முக்கியமாக இந்த தேதியில் பிறந்த பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள், திருமணத்திற்கு பின் பணப்பிரச்சனை ஏதும் இல்லாத ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











