இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை அற்புதமாக மாறும்.. உங்க பிறந்த தேதி என்ன?

Numerology: எண் கணிதத்தின் படி, ஒருவரது வாழ்க்கையில் அந்நபரின் பிறந்த தேதி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த எண்களைக் கொண்டு அந்நபரின் குணாதிசயங்கள், எதிர்காலம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஒருவரது வாழ்வில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் ஏற்படலாம். அதில் சிலருக்கு திருமணத்திற்கு பின் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

சொல்லப்போனால் திருமணம் ஒருவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக இருக்கும். ஏனெனில் திருமணத்திற்கு பின் சிலரது வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் மறைந்து, வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆனால் அனைவருக்குமே இப்படியான மாற்றம் ஏற்பட்டுவிடாது.

Numerology People Born On These Dates Life Will Change After Marriage

குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை அற்புதமாக இருக்கும். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்பதைக் காண்போம்.

எண் கணிதத்தின் படி, 6, 15, 24, 8, 17, 26, 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் திருமணத்திற்கு பின் மாறிவிடும். அதுவும் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். ஏனென்றால் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் மீனது சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்களின் தாக்கம் இருக்கும். இதனால் தான் இவர்கள் திருமணம் முடிந்த உடனே அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.

எண் 6

ஒரு மாதத்தின் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆசியைப் பெற்றவர்கள். இவர்கள் இயற்கையாகவே மிகவும் அழகாகவும், மற்றவர்களை ஈர்க்கும்படியான தோற்றத்துடனும் இருப்பார்கள். முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பார்கள். சமூகத்தில் இவர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

எண் 8

ஒரு மாதத்தின் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியில் இருந்தே சனி பகவானின் ஆசியை பெற்றிருப்பார்கள். இவர்களின் பிடிவாத குணம் ஒரு வேலையில் நல்ல வெற்றியைப் பெற உதவுகிறது. பொதுவாக சனி பகவான் ஒருவரது கடின உழைப்புக்கான பலனை நிச்சயம் அளிப்பார். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பதால், இவர்களுக்கு சனி பகவான் கடின உழைப்புக்கான பலனை கட்டாயம் வழங்குவார். அதுவும் இதெல்லாம் இவர்களின் திருமணத்திற்கு பின் நடக்கும்.

எண் 9

ஒரு மாதத்தின் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே செவ்வாயின் அருளைப் பெற்றவர்கள். எனவே இவர்கள் தைரியமானவர்களாகவும், துணிச்சல்மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் திருமணத்திற்கு பின் தனது துணையின் ஆதரவுடன் வாழ்க்கையில் புதிய உயரங்களை அடைவார்கள். அதுவும் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, March 13, 2025, 22:40 [IST]
Desktop Bottom Promotion