Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Numerology: நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களின் மனதை படிக்கக் கூடிய மாயாவிகளாம்...!
Numerology: ஜோதிட சாஸ்திரம் போலவே எண் கணிதமும் ஒருவரின் ஆளுமை, நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது. எண் கணித வல்லுநர்கள் நமது பிறந்த தேதியின் அடிப்படையில் ஒருவரின் ஆளுமையை துல்லியமாக கணிக்கின்றனர். ஒரு நபரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவரது வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கணிக்க எண் கணிதம் பண்டைய காலங்களிலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நியூமராலஜி படி 3 எண்களில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களையும் துல்லியமாக புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, மற்றவர்களின் மனதில் உள்ளது என்னவென்பதை எளிதில் படிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை விட அனைத்து விஷயங்களையும் விரைவில் கற்றுக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். அந்த திறமையான 3 நபர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எண் 3 (அனைத்து மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எளிதில் பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள். எண் கணிதத்தின் படி இந்த எண் கேது கிரகத்தால் குறிக்கப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி, எண் கணிதத்தின்படி, அவர்கள் மக்களின் மனதைப் படிக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
அவர்கள் கடந்த காலத்தில் நிறைய மோசமான அனுபவங்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால்அதிலிருந்து அவர்கள் எளிதில் வெளிவந்து விடுவார்கள். அதுமட்டுமின்றி, அவர்களின் திறமைகள் மூலம் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் வித்தையை அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் திறமையால் அவர்களுடைய வாழ்க்கை மட்டுமின்றி உடனிருப்பவர்களின் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவர்கள்.
எண் 7 (அனைத்து மாதத்திலும் 7,16 மற்றும் 25 தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை அதிகம் மதிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு எந்த பயமும் இருக்காது, மேலும் எந்த விஷயத்தையும் பற்றி அதிக கவலைப்படவும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் மக்களைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு, அதன் மூலம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தக்கவைத்து, அவர்கள் மனதில் இருப்பதைப் புரிந்து கொள்ள அவர்களால் முடியும்.
அவர்கள் எப்பொழுதும் புதிதாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் இருக்கும் மற்றொரு சிறப்பான குணம் இருப்பதை வைத்து எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள்.
எண் 9 ( அனைத்து மாதத்திலும் 9, 18 மற்றும் 27 தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் மர்மமான தன்மை கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் இவர்களை பற்றி மற்றவர்கள் விவரிக்கும் சொல்லும் இதேதான். இவர்கள் மனதில் இருப்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது, அதேசமயம் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவர்கள்.
அதுமட்டுமின்றி இவர்களால் ஒருவரின் வார்த்தைகளையும், சைகைகளையும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மற்றவர்களைக் கூர்மையாகக் கவனிப்பதும், பிறர் மனதில் இருப்பதைப் புரிந்துகொள்வதும் அவர்களின் சிறப்பம்சமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
