Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
நியூமராலஜி படி, இந்த தேதிகளில் பிறந்தவங்க திருமணத்துக்கு பின் பணக்காரர் ஆவாங்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மாற்றத்தை நாம் அனுபவிப்போம். அதில் நிறைய பேரின் வாழ்க்கை திருமணத்திற்கு பின் மாறியிருக்கும். சொல்லப்போனால் திருமணம் ஒருவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே கூறலாம். சிலருக்கு திருமணத்திற்கு பின் இதுவரை நடக்காத பல நல்ல விஷயங்கள் நடக்கலாம். இன்னும் சிலருக்கு திருமணத்திற்கு பின் செல்வம் பெருகி செல்வந்தர் ஆவதைக் காணலாம்.
இப்படி திருமணத்திற்கு பின் ஒருவரது வாழ்க்கையே தலைகீழ் ஆகலாம். அந்த வகையில் ஜோதிடத்தின் ஒரு கிளையான நியூமராலஜியின் படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின் பணக்காரர் ஆவதாக கூறப்படுகிறது.

உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்கு பின் செல்வந்தர் ஆகும் வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம். உங்கள் பிறந்த தேதியும் அதில் உள்ளதா என்பதை பாருங்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு பின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின் தங்கள் ஆற்றலை திறம்பட பயன்படுத்தி, நிறைய பணத்தை சம்பாதிக்கும் சக்தியை பெறுகிறார்கள். சொல்லப்போனால் இவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து தங்கள் வாழ்க்கையில் புதிய உச்சத்தை அடைவார்கள்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆசியைப் பெற்றவர்கள். இதனால் இவர்கள் இயற்கையாகவே அழகாகவும், பொருள் வசதியுடனும் இருப்பார்கள். முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் திருமணத்திற்கு பின் தான் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காண்பார்கள். எனவே நீங்கள் இந்த தேதிகளில் பிறந்திருந்தால், உங்கள் வாழ்க்கை திருமணத்திற்கு பின் தான் செழிப்பாக இருக்கும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணின் அதிபதி சனி பகவான். எனவே இந்த தேதிகளில் பிறந்தவர்கள் விடாமுயற்சியால் தங்கள் இலக்கை எளிதில் மாற்றும் ஆற்றல் கொண்டிருப்பார்கள். ஆனால் இது திருமணத்திற்கு பின் தான் நடக்கும். பொதுவாக சனி பகவான் ஒருவரது கடின உழைப்புக்கான பலனை நிச்சயம் தருவதாக கூறப்படுகிறது. அதுவும் திருமணத்திற்கு பின் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் வணிகம் மற்றும் முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்களைப் பெற்று பணக்காரர் ஆவார்கள். பணிபுரிபவர்களாக இருந்தால் திருமணத்திற்கு பின் பதவி உயர்வைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications