Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நியூமராலஜி படி இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் 30 வயதுக்கு பிறகு கோடீஸ்வரர் ஆவார்களாம்... உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: ஜோதிட சாஸ்திரம் போலவே நியூமராலஜியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜோதிடம் போலவே எண் கணிதத்தின் மூலம் பல விஷயங்களைக் கணிக்க முடியும். நியூமராலஜியில் ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்குப் பதிலாக அவர்களின் பிறந்த பிறந்த எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பிறப்பு எண் எப்போதும் நாம் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் விதி எண் என்பது மாதம், வருடம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைக் கணக்கிட்டு ஒற்றை எண்ணாக மாறும் வரை கூட்டி கணக்கிடப்படுகிறது.
எண் கணிதத்தில் விதி எண் மற்றும் பிறப்பு எண் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி குறிப்பிட்ட எண்ணில் பிறந்தவர்கள் அவர்கள் வாழ்க்கையில் தொடக்கத்தை விட இடைப்பட்ட காலத்தில் உச்சம் தொடுபவர்களாக இருப்பார்கள். குறிப்பாக அவர்கள் 30 வயது முதல் 40 வயதிற்குள் பல சாதனைகளை செய்பவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் அது எந்த எண், அந்த வயதில் அவர்களுக்கு கிடைக்கும் வெற்றிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

5 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் ஆளுமை
5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் எந்தவொரு பெரிய சவாலையும் ஏற்றுக்கொள்கிறார்கள், எதற்கும் பயப்பட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாற்றத்தையும் நேர்மறையாக அணுக முயற்சிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பார்கள். இதன் விளைவாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையில் பெரிய வெற்றியை அடைய முடியும். அவர்களின் பிற்கால வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானதகவும், மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்.
பிறந்த எண் 5
உங்கள் பிறந்த எண் 5 ஆக இருந்தால், எண் கணிதத்தின் படி நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பொதுவாக, எண் 5 நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும் எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே அவர்களின் வாழ்க்கையில் அனைத்து நேர்மறையான மாற்றங்களும் நிகழும் என்று கூறப்படுகிறது. 30 வயதுக்குப் பிறகு நீங்கள் செய்யும் அனைத்து கடின உழைப்பும் வாழ்க்கையில் நல்ல பலன்களை அளிக்கும். இது அவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நன்மைகளை கொண்டு வரும். மேலும் அவர்களின் வாழ்க்கையில் பல 30 வயதுக்குப் பிறகு மகிழ்ச்சியான மாற்றங்கள் காத்திருக்கிறது.
பிறந்த தேதி 14
பிறந்த எண் 14 ஆக இருந்தால், வாழ்க்கையில் அனைத்து விதமான வெற்றிகளையும் பெற அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி 14 எண்ணின் கூட்டுத்தொகை 5 ஆக இருப்பதால் அவர்களின் விதி எண் 5 தான். எனவே அவர்களும் 5 எண்ணின் அனைத்து பலன்களையும் பெறுகிறார்கள்.
30 வயதுக்குப் பிறகு நிதி நிலையில் எதிர்பாராத உயர்வு அவர்களுக்கு காத்திருக்கிறது, மேலும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அவர்களுக்கு காத்திருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த தடைகளைப் பார்த்தும் அஞ்ச மாட்டார்கள். 25 வயதிற்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கை சிறப்பாகவும், யாராலும் தடுக்க முடியாததாகவும் இருக்கும்.
பிறந்த தேதி 23
பிறப்பு தேதி 23 ஆக இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று எண்கணிதம் கூறுகிறது. 30 வயதிற்குப் பிறகு அவர்களின் சுக்கிர திசை வந்துவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் அவர்களுக்கு காத்திருக்கின்றன. இளம் வயதிலேயே அவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
புதன் எண் 5 ஐ ஆள்கிறது. எனவே புதனின் அனைத்துப் பலன்களும் அவர்களுக்குக் காத்திருக்கின்றன. 30 வயதுக்குப் பிறகு, யாராலும் தடுக்க முடியாத அதிர்ஷ்டத்தை அவர்கள் பெறுகிறார்கள். பணத்தையும் தாண்டி பல மகிழ்ச்சியான சாதனைகள் அவர்களுக்குக் காத்திருக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
