Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
Navratri 2025: பிறவியிலேயே துர்கா தேவியின் ஆசியைப் பெற்றவங்க இந்த 5 ராசிக்காரங்க தான்!
Navratri 2025: இந்து மதத்தில் மிகவும் முக்கியமான விரதம் தான் நவராத்திரி விரதம். 9 நாட்கள் துர்கா தேவிக்காக அனுஷ்டிக்கப்படும் இந்த நவராத்திரி விரதத்தில், துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகின்றன.
இந்த ஆண்டின் நவராத்திரி விரதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 2 ஆம் தேதி விஜய தசமியுடன் முடிவடைகிறது. வழக்கமாக நவராத்திரி 10 நாட்கள் வரும். ஆனால் இந்த ஆண்டு 11 நாட்கள் நீடித்திருக்கிறது. இதனால் ஆண்டு நவராத்திரி கூடுதல் சிறப்பானது என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சிவபெருமானின் சரிபாதியான சக்தியின் ஆசி ஒருசில ராசிக்காரர்களுக்கு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த ரு பிரச்சனையை சந்தித்தாலும், அதை சமாளிக்கும் திறனைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது துர்கா தேவியின் ஆசியைப் பெற்ற ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷபம் என்பது சைலபுத்ரி மற்றும் மகாகௌரியின் வாகனமாக கூறப்படுகிறது. ஆகவே இந்த ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் துர்கா தேவியின் விருப்பமான ராசிகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பதோடு, கடினமான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொள்வார்கள். ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் வாழ்வில் பெரிய உயரங்களை அடைவார்கள். இவர்களின் மிகச்சிறந்த குணம் என்னவென்றால், எதற்கும் அஞ்சமாட்டார்கள். துணிந்து எதிர்கொள்வார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த சந்திரன் துர்கா தேவியின் மூன்றாவது வடிவமான சந்திரகாந்தாவின் நெற்றியில் உள்ளார். இதனால் இந்த கடக ராசிக்காரர்கள் துர்கையின் ஆசியைப் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் புத்திசாலிகள், கடின உழைப்பாளிகள் மற்றும் பொறுப்பானவர்கள். எந்த சூழ்நிலையிலும் சரியான முடிவுகளை எடுக்கக்கூடிய வல்லமை கொண்டவர்கள். தொண்டுகளில் ஆர்வம் கொண்டவர்கள். இதனால் மற்றவர்களின் இதயங்களை எளிதில் வெல்வார்கள். இந்த ராசிக்காரர்கள் துர்கா தேவியின் ஆசியைப் பெற்றிருப்பதால், கடினமான சவால்களைக் கூட எளிதில் வென்று உச்சத்தை அடைவார்கள்.
சிம்மம்
துர்கா தேவியின் வாகனம் சிங்கம். இந்த சிங்கம் சிம்ம ராசியின் அடையாளமாகும். எனவே இந்த சிம்ம ராசிக்காரர்கள் துர்கா தேவியின் சிறப்பான அருளைப் பெற்றவர்களாக கூறப்படுகிறது. மேலும் இந்த ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்கள், தைரியமானவர்கள். துர்கையின் ஆசியைப் பெற்றிருப்பதால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு எப்போதும் இருக்கும். நெருக்கடியான காலங்களில் கூட இவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். இவர்கள் தங்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
கன்னி
பெண்கள் துர்கையின் வெளிப்பாடாக கருதப்படுவதால், கன்னி ராசிக்காரர்களும் துர்கா தேவியின் விருப்பமான ராசிக்காரர்களாக கூறப்படுகிறது. இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் திறமையானவர்கள், மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இவர்கள் தங்களின் வாழ்வில் எப்பேற்பட்ட தடையை சந்தித்தாலும், அதை உடைத்து வெற்றி பெற்று காட்டுவார்கள். அதோடு இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள், சென்சிடிவ்வானவர்கள் மற்றும் அனைவரது நலத்தையும் விரும்புபவர்களாக இருப்பர்.
தனுசு
தனுசு ராசியின் அடையாளம் துர்கா தேவியின் கைகளில் உள்ள வில் ஆகும். இந்த தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்களும் துர்கா தேவியின் ஆசியைப் பெற்றவர்களாக கருதப்படுகிறது. இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்வார்கள். சிறந்த தலைவர்களாக திகழ்வார்கள் மற்றும் கடின உழைப்பின் மூலம் வெற்றியைப் பெறுவார்கள். தொழிலில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இதனால் அவ்வப்போது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications