Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஆபத்தான சுயநலவாதிகளாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அனைவருக்கும் நல்லது செய்வர்களை எப்போதும் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் சிலர் மற்றவர்களுக்கு பிடித்தாலும், பிடிக்கா விட்டாலும் தங்கள் விருப்பபடிதான் வாழ்வார்கள். ஜோதிடத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் சொந்த நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் சுயநலவாதிகளாக இருப்பார்கள்.
தங்கள் சொந்த நன்மைகளுக்காக அவர்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் மற்றும் அவர்களை சுற்றியிருப்பவர்களையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சுயநலம் பெரும்பாலும் மற்றவர்களின் உணர்ச்சிகள் மற்றும் தேவைகளைப் பற்றி சிந்திக்க விடாமல் தடுக்கிறது. அதீத சுய முக்கியத்துவம் கொண்ட அவர்கள், தனிப்பட்ட ஆதாயம் மற்றும் மனநிறைவுக்காக தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், சுயநலவாதிகள், மேலும் மற்றவர்களின் விருப்பங்களைப் பற்றி மிகவும் குறைவாகவே கவலைப்படுகிறார்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், அவர்கள் தங்கள் விருப்பத்தின் படி நடந்து கொள்கிறார்கள்.
மேஷ ராசிக்காரர்களின் போட்டி மனப்பான்மை அவர்களை வெற்றி பெறத் தூண்டுகிறது, அதற்காக அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். அவர்களின் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டியது, ஆனால் மற்றவர்களை அதற்காக காயப்படுத்துவது தவறான விஷயமாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வேகமாக சிந்திக்கும், இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள், ஆனால் அவர்கள் அதீத சுயநலவாதிகளாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் அறிவுத்திறனையும், புத்திசாலித்தனத்தையும் மிகப்பெரிய சொத்தாக மதிக்கிறார்கள்.
அவர்கள் எந்த விஷயத்திலும் நேர்மையான அணுகுமுறை இல்லாதவராக இருக்கலாம், தங்கள் விருப்பப்படி விஷயத்தை மாற்றிக் கொள்ளலாம். மிதுன ராசிக்காரர்களின் எளிமையான இயல்பு அவர்களை சுவாரஸ்யமானவர்களாக மாற்றுகிறது, ஆனால் விசுவாசமற்ற நண்பராக மாற்றுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சாகசக்காரர்கள் ஆனால் சுயநலமான ஆன்மாக்கள். அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காதவர்களாகவும், விவேகமற்றவர்களாகவும் இருப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்களின் உற்சாகமும் நம்பிக்கையும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிய அவர்களைத் தூண்டுகின்றன, ஆனால் அந்த தேடலில் அவர்கள் மற்றவர்களின் நலன்களை புறக்கணிப்பார்கள் மற்றும் வாய்ப்புகளைப் தட்டிபி பறிப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் தங்களைத் தாங்களே முதன்மைப்படுத்திக் கொள்கிறார்கள், கவனத்தையும், பாராட்டையும் விரும்புகிறார்கள். அவர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் இருக்க விரும்புகிறார்கள், மற்றவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும், மற்றவர்களால் மறுக்க முடியாத அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவார்கள். சிம்ம ராசிக்காரர்களின் தலைமைத்துவ இயல்பு அவர்களை பிரபலமாக மாறச் செய்யும், இது மற்றவர்களின் உணர்வுகளையும், தேவைகளையும் புறக்கணிக்கச் செய்யும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












