Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
January Horoscope 2025: உங்க ராசி என்னனு சொல்லுங்க...ஜனவரி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
Monthly Horoscope January 2025: ஜனவரி மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. புதிய மாதமாக மட்டும் இல்லாமல் புது வருடமாக இருப்பதால் அனைவரும் தங்கள் ராசிக்கு புதிய வருடத்தின் முதல் மாதத்தில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். ஜனவரி 13ம் தேதி வரை சூரியன் தனுசு ராசியில் இருக்கிறார், ஜனவரி 14 அன்று சூரியன் மகர ராசிக்கு மாறுகிறார்.
இதேபோல் இந்த மாதத்தில் பல கிரக மாற்றங்கள் நிகழப் போகிறது. சுக்கிரன் கும்ப ராசியில் இருக்கிறார், மேலும் சுக்கிரன் ஜனவரி இறுதியில் மீன ராசிக்குள் நுழைகிறார். இது தவிர புதனும் ஜனவரி மாதத்தில் தனது ராசியை மாற்றுகிறார். இந்த பல்வேறு கிரக நிலையின் அடிப்படையில் 12 ராசிகளுக்கும் ஜனவரி மாதம் எப்படி இருக்கப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் பல விஷயங்களில் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். மேஷ ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் கவனம் செலுத்தி வரும் வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வேலையில் அடிக்கடி சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். இருப்பினும், நிதி சிக்கல்கள் எதுவும் இல்லை. ஆரோக்கியம் இந்த மாதம் திருப்தியாகவே இருக்கும்.
ரிஷபம்
சுக்கிரனின் நிலை பெரும்பாலும் ரிஷப ராசியினருக்கு வாழ்க்கைச் சூழ்நிலையில் சாதகமான சூழ்நிலையைத் தருகிறது. நீங்கள் பல வழிகளிலிருந்து லாபத்தைப் பெறலாம். மேலும் அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பாராட்டும், அங்கீகாரமும் இந்த மாதம் உங்களைத் தேடிவரும். காதலிப்பவர்கள் தங்கள் திருமணத்திற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஜனவரி மாதம் சில சமயங்களில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டும், ஏனெனில் எ அவர்களின் தொழில் வாழ்க்கையில் சில தடைகள் ஏற்படும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். திருமண தடைகள் அனைத்தும் நீங்கும். நிதி நிலையிலும் சில முன்னேற்றங்கள் ஏற்படலாம். பொதுவாக தீய பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும், அதனை எளிதில் கடக்கலாம்.
கடகம்
ஜனவரி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். இருப்பினும், இந்த மாதம் மன அழுத்தம் அதிகரிக்கலாம். நிதிநிலையை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தேடிவரும், ஆனால் அதை சரியாகப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் சில தடைகள் ஏற்படலாம், அதோடு சில தேவையற்ற செலவுகள் உங்கள் சேமிப்பை கரைக்கலாம். இது அதிக நிதிச் சுமைகளுக்கு வழிவகுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் சிறப்பான பலன்கள் கிடைக்கும் மாதமாக இருக்கும். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாகவும், கவனமாகவும் கையாள வேண்டும். இல்லையெனில், விஷயங்கள் முற்றிலும் தலைகீழாக மாறும். மேலும் குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த தியானத்தில் ஈடுபடுவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்த மாதத்தில் தேடிவரும். உடன்பிறந்தவர்களால் இந்த மாதம் சில சிக்கல்களும், தடங்கல்களும் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். பொருளாதாரரீதியாக சில பிரச்சினைகள் ஏற்படலாம், எனவே அதனை கடக்க முன்னேற்பாட்டுடன் இருப்பது அவசியம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தில் வேலை விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தேவையற்ற விஷயங்களில் பணத்தையும், நேரத்தையும் செலவிடாமல் கவனமாக இருங்கள். செவ்வாய் பாதகமான இடத்தில் இருப்பதால் வாழ்வில் தடைகள் அதிகமாகலாம். பல விஷயங்களில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமான தடங்கல்களை நீங்கள் சந்திக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு அலுவலகச்சூழல் சாதகமற்றதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மன உளைச்சல் அதிகமாகும். நிதிநிலை எதிர்பார்த்தது போல இருக்காது, மேலும் நிதிநிலையில் பெரும்பாலும் இழப்புகள் ஏற்படும். ஆனால் ஜனவரியின் நடுப்பகுதியில் நிலைமை மாறலாம். அதன்பின் வணிகம் சூடு பிடிக்கலாம், வாழ்க்கையின் அனைத்து விஷயத்திலும் உங்களின் உற்சாகம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அன்பும், நெருக்கமும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் நடக்கும் வியாழனின் வக்ர சஞ்சாரம் பல வழிகளில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் அனைத்து விஷயத்திலும் சுயக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் நிதிரீதியாக மிகவும் சாதகமான நேரத்தை அனுபவிக்கப் போகிறார்கள். வேலைகளைச் சரியாகச் செய்து, சாதகமானப் பலன்களை பெறுவார்கள். அதிகமாக பொறாமைப்படுபவர் ஒருவர் அவர்கள் வாழ்க்கையில் நுழையலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரம் செலவிடலாம். மேலும் நீதியை நிலை நாட்டுவதும், அனைத்து விஷயங்களையும் சரியாக செய்து பலன்களைப் பெறலாம். சொத்து பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். இந்த மாதத்தில் அவர்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழலாம். ஆனால் மாதத்தின் இரண்டாம் பாதியில், சில சாதகமற்ற விஷயங்கள் ஏற்படலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஜனவரி மாதத்தில் தங்கள் முடிவுகளை தீவிரமாக சிந்தித்து அதன்பின் எடுக்க வேண்டும். இல்லையெனில் அது உங்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தலாம். அதேசமயம் வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். வாழ்வில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் எல்லாவற்றிலும் பொறுமையும், சிந்தனையும் அவசியம். பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும், முக்கியமான விஷயம் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.
மீனம்
ஜனவரி மாதம் மீன ராசிக்காரர்களுக்கு பல மாற்றங்கள் காத்திருக்கின்றன. எதிர்பாராத நிதி பலன்களைப் பெறுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது. தேவையற்ற எண்ணங்கள் அவர்களை கவலையடையச் செய்யும். ஆனால் எல்லாவற்றையும் நன்றாக நிர்வகிக்க கவனமாக இருக்க வேண்டும். மீன ராசிக்காரர்கள் பல மகிழ்ச்சியான மாற்றங்களை சந்திக்கலாம். வாழ்க்கையே மாறும் அளவுக்கு பல விஷயங்கள் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
