Latest Updates
-
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா?
டிசம்பர் இறுதியில் உருவாகும் புதன்-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்...
Mercury Venus Conjunction In Sagittarius On 29 December 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து பயணிக்கவும் செய்கின்றன. இப்படி கிரகங்களின் சேர்க்கை நிகழும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மறுபுறம் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.

இவ்விரு கிரகங்களும் டிசம்பர் மாத இறுதியில், அதுவும் டிசம்பர் 29 ஆம் தேதி தனுசு ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். இந்த கிரங்களின் சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதில் சில ராசிக்காரர்களின் நிதி நிலை உயரும் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலும் நல்ல பொருள் வசதிகளையும் பெறும் வாய்ப்புள்ளது. இப்போது டிசம்பர் இறுதியில் தனுசு ராசியின் ஒன்றிணையும் புதன் சுக்கிர சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையும் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலையையும் எளிதில் சமாளிப்பீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலை தொடர்பாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதனின் ஆசியால், பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து இரட்டிப்பு லாபத்தைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் கௌரவமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களைப் பெறுவீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். மாமியார், மாமனாருடனான உறவு சுமூகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications