Latest Updates
-
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
100 ஆண்டுகள் கழித்து புதன் பெயர்ச்சியால் உருவாகியுள்ள இரட்டை ராஜயோகம்:இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்
Mercury Transit Made 2 Rajyoga In Scorpio 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக மிகவும் வேகமாக ராசியை மாற்றக்கூடியவர். மேலும் இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இப்படிப்பட்ட புதன் டிசம்பர் 06 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இந்த புதன் பெயர்ச்சியால் விருச்சிக ராசியில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகியுள்ளன. அதில் புதன் சூரியனுடன் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகத்தையும், சுக்கிரனுடன் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தையும் உருவாக்கவுள்ளார். இப்படி இவ்விரு ராஜயோகங்களும் ஒன்றாக உருவாவது மிகவும் மங்களகரமானது.

இந்த ராஜயோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த இரட்டை ராஜயோகங்களால் தொழிலில் முன்னேற்றத்தையும், செழிப்பான வாழ்க்கையையும் வாழவுள்ளனர். முக்கியமாக மன அமைதி அதிகரிக்கும். இப்போது புதன் பெயர்ச்சியால் உருவான இரட்டை ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களால் விருச்சிக ராசிக்காரர்கள் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை காண்பார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். தாயாருடனான உறவு வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ள புதாதித்ய மற்றும் லட்சுமி நாராயண ராஜயோகங்களால் மீன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்கள் திடீர் ஏற்றத்தைக் காண்பார்கள். முன்னேற்ற பாதை திறக்கப்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்ந்து, பரம்பரை சொத்து கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











