Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
12 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: செப்டம்பரில் இந்த 3 ராசிகளின் வருமானத்தில் உயர்வு ஏற்படபோகுது!
Mercury Transit In Virgo On 15 September 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக வேகமாக தனது நிலையை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் அதிபதியும் கூட.
இந்த புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் ஒருவரது தொழில், புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு ஆகியவற்றில் காணப்படும். அந்த வகையில் புதன் செப்டம்பர் 15 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். கன்னி ராசிக்கு புதன் சுமார் 12 மாதங்கள் கழித்து செல்கிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் வாழ்வில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். அதோடு வருமானத்தில் நல்ல உயர்வையும், தொழிலில் நல்ல வளர்ச்சியையும் காணவுள்ளனர். இப்போது புதன் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மேலும் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புக்களும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். வேலை செய்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். உடன் வேலை செய்வோருடனான உறவு மேம்படும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக இக்காலத்தில் புதனின் அருளால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதனின் பார்வை உங்கள் ராசியில் இருந்து லக்ன வீட்டின் மீது உள்ளது. இதனால் படைப்பாற்றலும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கலாம். புதிய திட்டங்களை அல்லது வேலைகளை தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். கலை, இசை, வங்கி, ரியல் எஸ்டேட் போன்ற துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications