Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
புதன் பெயர்ச்சியால் அக்டோபர் இறுதியில் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Mercury Transit In Scorpio On 29 October 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார், படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார், மிகவும் புத்திசாலியாக மற்றும் சிறந்த பேச்சாளராக இருப்பார்.
இப்படிப்பட்ட புதன் கிரகங்களில் சந்திரனுக்கு அடுத்ததாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் துலாம் ராசிக்குள் நுழைந்தார். அதன் பின் அக்டோபர் 22-ல் புதன் உதயமாகவுள்ளார். பின்பு அக்டோபர் 29-ல் புதன் விருச்சிக ராசிக்குள் செல்லவுள்ளார்.

செவ்வாயின் ராசிக்குள் புதன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால், அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். அதோடு நல்ல நிதி நன்மைகளையும் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முதலீடுகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல வெற்றியுடன், நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதோடு, விரிவாக்கும் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications