Latest Updates
-
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க.. -
தாஜ் மஹால் கட்டப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஏன் நிலத்தை கொடுத்தார் தெரியுமா? -
தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்! -
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம்
விருச்சிகம் செல்லும் புதனால் 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் உச்சம் தொடப்போகிறார்களாம்...உங்க ராசி இதுல இருக்கா?
அறிவாற்றல் மற்றும் ஞானத்தின் கிரகமான புதன் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விருச்சிக ராசியில் நுழைகிறார். புதனின் இந்த மாற்றத்தால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகிறது. லக்ஷ்மி நாராயண யோகத்தால் 4 ராசிக்காரர்கள் வாழ்விலும் வேலையிலும் பல நன்மைகளைப் பெறலாம். லட்சுமி தேவியின் அருளைப் பெறப்போகும் அந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
புதனின் இந்த ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு வேலை சம்பந்தமான விஷயங்களில் பெரும் லாபம் ஈட்ட உதவுகிறது. உங்கள் வேலையில் முன்னேற இது உதவுகிறது. அதேபோல், பணியிடத்தில் நல்ல அனுபவங்களும் கிடைக்கும்.
வியாபாரிகள் புதிய திட்டங்கள் மூலம் லாபம் ஈட்ட முடியும். மேலும், லக்ஷ்மி நாராயண யோகத்தால் வருமானம் வெகுவாக அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் வரும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கும், கட்டுமானத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் இது சிறப்பான காலமாக இருக்கும்.
சிம்மம்
லக்ஷ்மி நாராயண யோகத்தால் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல அனுபவங்கள் காத்திருக்கிறது. வீட்டில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சரியான உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது சரியான நேரம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகத்தால் பணியில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் திறமை மற்றும் நேர்மைக்காக மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சுத் திறமையால் பலர் உங்களை நம்பி புதிய திட்டங்களை ஒப்படைப்பார்கள்.
வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, இது வணிகத்தை லாபகரமானதாக மாற்ற உதவுகிறது. புதிய கார் வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பயணம் செய்ய வேண்டி வரும். குழந்தைகளின் கல்விக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டில் வேலையில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறப்பான நேரம். ஆரோக்கியத்தில் சிறு பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அது விரைவில் குணமாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

