Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூலை 29 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், லாபமும் குவியப்போகுது...
Mercury Transit In Poosam Nakshatra On 29 July 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றி, ஒவ்வொருது ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கும்.
அந்த வகையில் நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றக்கூடியவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட்ட புதன் ஜூலை 29 ஆம் தேதி சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த நட்சத்திரத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இருப்பார். ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த நட்சத்திரத்திற்கு எந்த கிரகம் வந்தாலும், அது மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம் ஆகியவற்றை வழங்கும்.
இப்படியிருக்க சனி பகவானின் பூச நட்சத்திரத்திற்கு புதன் செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக தொழிலில் நல்ல வெற்றியுடன், லாபமும் கிடைக்கப் போகிறது. இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். தாயுடனான உறவும் நன்றாக இருக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் நன்மைகளைப் பெறக்கூடும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள் மற்றும் அந்த நண்பர்களால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
மிதுனம்
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிரிகளை திறம்பட வென்று வீழ்த்துவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மேம்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர பெயர்ச்சியானது கடின உழைப்புக்கான பலனைத் தரப் போகிறது. பணியிடத்தில் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் சந்திக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புத்திசாலித்தனத்தால் பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
