Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
அக்டோபரில் துலாம் ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க..
Mercury Transit In Libra On 03 October 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ஒருவரது வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். கிரகங்களிலேயே புதன் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். தற்போது புதன் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 03 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்.

புதன் சுக்கிரனின் ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பார்கள்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள். இப்போது அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கும் புதன் பெயர்ச்சியால் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்கள் புதிய உயரங்களை அடைவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதன் ஒவ்வொரு விஷயத்திலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். வேலையில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால், இரட்டிப்பு லாபத்தைப் பெறக்கூடும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
