Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்!
Mercury Transit In Leo On 22 August 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். அந்த வகையில் நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

கிரகங்களின் இளவசரனாக கருதப்படும் புதன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன். புதனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் புதனால் நிதி ரீதியாக கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில சவால்களையும் தடைகளையும் சந்திப்பார்கள். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். இதன் மூலம் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராத மாற்றங்களுடன், அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடைவதால், அவரது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தம்பதிகளிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் எழலாம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். எனவே சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியாமல் போகலாம். சிலர் பண பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கும் முன்பும் பலமுறை யோசித்து செய்ய வேண்டும். தம்பதிகளிடையே பிரச்சனைகள் அதிகரிக்கலாம். காதல் தோல்வி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பிரச்சனைகளைத் தவிர்க்க நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த புதன் பெயர்ச்சியானது ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம். இக்காலத்தில் பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளதால், பேச்சும் போது கவனமாக இருக்க வேண்டும். திட்டமிட்ட வேலைகள் எதிர்பார்த்தபடி நடக்காமல் போகலாம். இது மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளக்கூடும். செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் அவ்வப்போது எழும் என்பதால், உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

