Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது..
Mercury Transit In Leo 2026: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

இந்த புதன் நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்த சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். இந்த ராசியில் புதன் செப்டம்பர் 07 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்த ராசியில் ஏற்கனவே சூரியனும் இருப்பதால், இந்த புதன் பெயர்ச்சியால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் வேலை மற்றும் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணக்கூடும். இப்போது சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் அற்புதங்கள் நிகழும். புதன் மற்றும் சூரியனின் அருளால் நிதி நிலைமை மேம்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரிகள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப உறுப்பினர்களிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியிருந்தால், இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆடம்பரத்தை அனுபவிப்பார்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வருதும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். முக்கியமாக பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.
மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். காதல் மற்றும் திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இக்காலத்தில அது நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



